மெஸ்ஸி - மரடோனா, குளோஸ் - முல்லர்... முறியடிக்கப்படுமா உலகக் கோப்பை சாதனைகள்? #WorldCupSponsoredஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வெகு விமரிசையாக ரஷ்யாவில் நடந்து வருகிறது. குரூப் பிரிவின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்துள்ளன நிலையில், சில புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. சில அதிர்ச்சிகள் நடந்து வருகின்றன. உலகக் கோப்பை எதிர்பார்த்ததைப் போலவே பரபரப்பும் விறுவிறுப்பும் குறையாமல் நடந்துகொண்டிருக்கிறது. 

போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெய்ன் அணிக்காக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம், உலக்க கோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். அதேசமயம் தொடர்ந்து 4 உலகக் கோப்பைத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018) கோலடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். இப்படி மகத்தான சாதனைகளும் படைக்கப்படுகின்றன, ஓர் அணியின் பழைய சாதனைகள் மாற்றியும் எழுதப்படுகின்றன. அந்த வகையில் இந்த உலகக் கோப்பையில் இனியும் முறியடிக்கப்படக்கூடிய சில சாதனைகளின் பட்டியல்...

Sponsored


உருகுவே நாட்டின்  பயிற்சியாளர் ஆஸ்கர் டபரஸ் மற்றும் போர்ச்சுகல் நாட்டின் ஃபெர்னான்டோ சான்டோஸ் ஆகியோரின் வயதினைக் கூட்டினால் வருவது 135 வயது மற்றும் மூன்று மாதங்கள். இரண்டு நாடுகளும் சந்தித்துக்கொண்டால் பயிற்சியாளர்களின் அதிகபட்ச வயது இதுவாகத்தான் இருக்கும். இதற்குமுன்பு 2010-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க உலகக் கோப்பையில் கிரீஸ் நாட்டின் ஓட்டோ ரேகல் மற்றும் நைஜீரியா நாட்டின் லார்ஸ் லேகர்பக் ஆகியோர் சந்தித்துக்கொண்டபோது அவர்களின் கூட்டு வயதுதான் அதிகமானதாக இருந்தது (133 வருடம் மற்றும் ஒன்பது மாதங்கள்)  

Sponsored


உலககோப்பை வரலாற்றில் மிகவும் வயதான வீரர் என்ற பெயர் எடுத்தவர் ரஷ்ய நாட்டின் ஃபாரிட் மோண்ட்ரகன். தன் கடைசி உலகக் கோப்பை போட்டியில் விளையாடியபோது இவருடைய வயது 43 வருடம் மற்றும் மூன்று நாள்கள். இந்த வயதினை முறியடிக்க எகிப்து நாட்டின் எஸ்ஸாம் எல்-ஹாதரியால் முடியும். இந்த உலகக் கோப்பையில் களமிறங்கும்போது இவருடைய வயது நாற்பத்தைந்து வயது மற்றும் மூன்று மாதங்கள். 

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றவர் மரடோனா. இந்த சாதனையை முறியடிக்க மெஸ்ஸி இன்னும் மூன்று கோல்கள் அடிக்க வேண்டும். மரடோனா கேப்டனாக 6 கோல்கள் அடித்துள்ளார். இதுவரை உலகக் கோப்பையில் 5 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி, கேப்டனாக 4 கோல்கள் அடித்துள்ளார் (2014 உலகக் கோப்பை).

மூன்று உலகக்கோப்பைகளில் ஐந்து கோல்கள் என்ற சாதனையை நோக்கி முன்னேறுகிறார் தாமஸ் முல்லர். சக வீரரான மிரோஸ்லாவ் குளோஸ் மற்றும் பெரு நாட்டைச் சேர்ந்த டஃபிலோ க்யுபில்லாஸ் மட்டுமே இரண்டு முறைக்கு மேல் நான்கு கோல்களுக்குமேல் அடித்தவர்கள். உலகக்கோப்பை போட்டிகளில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற பெருமையைக் கொண்டுள்ளார் குளோஸ்.

ஐந்து முறை உலகக்கோப்பை போட்டியில் பங்குபெற்றவர் என்ற சாதனையை, மெக்சிகோ நாட்டின் அன்டோனியோ கார்பஜல் மற்றும் ஜெர்மன் நாட்டின் லோதர் மாத்தாஸ் ஆகியோருடன் சமன் செய்கிறார் மெக்சிகோ நாட்டின் ரஃபா மார்க்யூஸ். 

மரியோ சகல்லோ மற்றும் ஃபிரான்ஸ் பெகன்பர் ஆகிய இருவர் மட்டுமே, வீரர்களாகவும், பயிற்சியாளர்களாகவும்  உலகக் கோப்பையைக் கைப்பற்றியவர்கள். இந்த முறை டிடியர் டேஸ்காம்ப்ஸ் ஃபிரான்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தால் அவரும் இந்தச் சாதனையைச் சமன் செய்வார்.Trending Articles

Sponsored