தென்னாப்பிரிக்க அனுபவம் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது! - விராட் கோலி பளீச்



Sponsored



தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம் இந்திய அணிக்கு நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 


 

இந்திய அணி இங்கிலாந்து செல்லும் முன்னர், அயர்லாந்து அணிக்கெதிராக இரண்டு போட்டிகள்கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவுக்குப் பின்னர் டெஸ்ட் தொடர் நடத்தப்படவிருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஓல்டு ட்ராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்கவிருக்கிறது. 

Sponsored


அயர்லாந்து புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய கோலி, ``தென்னாப்பிரிக்காவில் விளையாடிய அனுபவம், வீரர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அங்கு விளையாடும்போது, முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தோம். அப்போது, எங்கள்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மூன்றாவது டெஸ்டை வென்றதுடன், அடுத்து நடைபெற்ற இரண்டு தொடர்களையும் கைப்பற்றினோம். அதன்பிறகு நாங்கள் விளையாடிய விதம் குறித்து அவர்களுக்குப் புரிந்தது. அதேபோல்ல, மற்ற நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என எண்ணுகிறோம். வித்தியாசமான கிரிக்கெட்டை விளையாடத் தயாராக இருக்கிறோம்’’என்றார். 

Sponsored


இந்த ஆண்டு தொடக்கத்தில், தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அதன்பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்று, இந்திய அணி அசத்தியது. 
 



Trending Articles

Sponsored