26 வயதில் 27 நிறுவனங்களின் தூதர்... விளம்பர உலகிலும் நெய்மர் கில்லி!Sponsored2014ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குமுன் ஒரு நாள்: டோக்கியோவில் உள்ள ஓர் இத்தாலிய கடிகாரக் கடைக்குச் சென்ற நெய்மர் 1,40,000 பவுண்டுகளுக்குமேல் செலவழித்து, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட கைக்கடிகாரங்களை வாங்கினாராம். ஆனால், மூன்று வருடங்கள் கழித்து அதே கடைக்குள் நுழைகிறார். காரணம், கடிகாரம் வாங்க அல்ல, அவருடைய விருப்பமான பிராண்டான காகா மிலானோவின் மூலமாக `நெய்மர் டிசைன்' கடிகாரங்களை வெளியிட! 

பார்சிலோனாவில் அவருடைய ஜெர்சி எண் 10 என்பதால், அந்தக் கடிகாரத்தில் பதினொன்றாம் எண்ணில் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. இப்போது பத்தாம் எண்ணில் வைரங்கள் பதிக்கப்பட்ட கைக்கடிகாரம் 1,050 பவுண்டுகளுக்கு விற்பனையாகிறது. கைக்கடிகாரங்கள் மட்டும் அல்லாமல், நைக் ஷூக்கள், ட்ரே ஹெட்போன்ஸ், ஜில்லெட், கோல் ஏர்லைன்ஸ், ரீப்ளே ஜீன்ஸ், C&A உள்ளாடைகள், ரெட் புல், பிலாஒவ் காபி, ப்ரோஹிபிடியா பீர் என்று விளம்பர உலகில் கொடிகட்டிப் பறக்கிறார் நெய்மர். 

Sponsored


பேட்டேரியாஸ் ஹேலியர் என்ற கார் பேட்டரி நிறுவனம் நெய்மரின் பெயரில் ஒரு புதிய பேட்டரியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 
இப்படி 26 வயதில் 27 நிறுவனங்களுக்கு முகமாகத் திகழும் நெய்மர், ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ஆய்வின்படி உலகிலேயே அதிகமாக ஊதியம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் வரிசையில் தற்போது ஐந்தாவது இடத்திலிருக்கிறார். 

Sponsored


கடந்த ஆண்டு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட நெய்மருக்கு வார அடிப்படை ஊதியம் மட்டும் ஆறு லட்சம் பவுண்டுகள்! இது மற்ற பிரஞ்ச் லீக் வீரர்களைவிட இரண்டு மடங்கு அதிகம். இதன்மூலமாக மட்டுமல்லாமல் அவருடைய எண்டோர்ஸ்மென்ட் மூலமாகவும் அவருக்கு 13 மில்லியன் பவுண்டுகள் கிடைத்தன. 

கடந்த ஆண்டு ரொனால்டாவுக்கு எண்டோர்ஸ்மென்ட் மூலமாகக் கிடைத்தது 35 மில்லியன் பவுண்டு. மெஸ்ஸிக்கு 20 மில்லியன் பவுண்டு. கூடிய விரைவில் நெய்மரும் இந்த அணியில் வந்து இணைந்துகொள்வார் என்றே தோன்றுகிறது. ஏன்? இதுவரை ரொனால்டோ 28 விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தமானார். மெஸ்ஸியோ 17. ஆனால், இதுவரை 38  நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட நெய்மர், தற்போது 27 பங்குதாரர்களோடு இருக்கிறார். இதில் இணையச் சந்தையான `விஷ்’, குவாண்டம் ஸ்மார்ட் போன்கள் மற்றும் நபுஃபிட் விளையாட்டுப் பொருள்களும் அடங்கும். 

இதில் ஓராண்டுக்கு அதிகப்பட்ச வருமானம் ஈட்டுவது ( மூன்று மில்லியன் பவுண்டுகள்) ரெட் புல், ஜில்லெட் மற்றும் பீட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் மூலம். பேட்டரி நிறுவனமான பேட்டரியாஸ் ஹெலியார் மூலம் கிடைப்பது ஆண்டுக்கு ஒரு மில்லியன் பவுண்டு. 2016 ம் ஆண்டு அவருடைய பார்சிலோனா ஊதியம் 11 மில்லியன் பவுண்டு. ஆனால், அவருக்கு விளம்பரம் மூலம் கிடைத்த ஊதியமோ 17 மில்லியன் பவுண்டு. கடந்த ஆண்டு PSG அணி அவரை 198 மில்லியன் பவுண்டுக்கு பார்சிலோனாவிடமிருந்து வாங்கிய பிறகு, அந்த அணியின் உரிமையாளர் நாசர் அல்-கிலாஃபி கூறுகையில்:

``நெய்மரின் வருகைக்கு முன் எங்கள் கிளப்பின் மதிப்பு ஒரு பில்லியன் பவுண்டு. இப்போது ஒன்றரை பில்லியன் பவுண்டு. உலகின் மிகச்சிறந்த வீரர் இங்கு இருக்கிறார். இந்தத் திட்டம் மேலும் உறுதியாகவும், சுவாரஸ்யமாகவும் வளரும் என்று நம்புகிறேன். நெய்மர் எனும் பிராண்டு அதீத மதிப்புள்ளதாகத் தெரியாமல் போகலாம். ஆனால், அவருக்காக நாங்கள் செலவு செய்த தொகையினைவிட அதிகமாக மீட்டெடுப்போம் என்று நம்புகிறேன்” என்றார். 

ஆனால், நெய்மர் இந்த அணியோடு தொடர்வதிலும் சில குழப்பங்கள் எழுந்துள்ளன. ரியல் மாட்ரிட் அணி நெய்மரை வாங்க விருப்பமாக இருப்பதால், நெய்மரின் ஒப்பந்தத்தில் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 
அவருடைய எண்டார்ஸ்மென்ட் பெரும்பாலும் பிரேசிலோடு இணைந்துள்ளதாக இருக்கும் இவ்வேளையில் அவருடைய பிராண்டின் மதிப்பினைக் கூட்ட நெய்மர் ஒன்று செய்யலாம்; மெஸ்ஸியோ, ரோனால்டோவோ செய்யாத ஒன்று உண்டு ; அது – ரஷ்யாவில் இம்முறை உலகக்கோப்பையை வெல்வது! Trending Articles

Sponsored