லண்டனில் இந்திய வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட அர்ஜுன் டெண்டுல்கர்!Sponsoredகிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இங்கிலாந்தில் இந்திய வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். 

Photo: Twitter/BCCI

Sponsored


இந்திய அணி ஜூலை மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடனும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இங்கிலாந்து புறப்பட்ட இந்திய வீரர்கள் தற்போது லண்டனில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Sponsored


இந்திய அணியின் சாம்பியன் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், இலங்கையில் நடைபெறவுள்ள தொடருக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 18 வயதான அர்ஜுன் இடது கை வேகப்பந்துவீச்சாளர். தற்போது லண்டனில் பயிற்சி பெற்று வரும் அர்ஜுன் நேற்று இந்திய வீரர்களுக்கு வலை பயிற்சியின்போது பந்து வீசினார். அப்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் அவருக்கு ஆலோசனைகள் வழங்கினார். 

இதுதொடர்பான புகைப்படங்களை, பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அர்ஜுன், இந்திய வீரர்களுடன் இதற்கு முன்னதாகவும் மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.Trending Articles

Sponsored