இன்று தொடங்குகிறது இந்தியா அயர்லாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர்!Sponsoredஇந்தியா அயர்லாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று டப்லின் மைதானத்தில் தொடங்குகிறது. 

Photo Credis: BCCI/Twitter

Sponsored


இந்திய அணி ஜூலை மாதத்தில் இங்கிலாந்து மண்ணில் தொடங்கும் தொடரில் விளையாடவுள்ளது. 3 டி20 போட்டிகளுடன் ஜூலை 3 -ம் தேதி தொடங்கும் இந்தத் தொடர், பின்னர் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருடன் முடிவடைகிறது. சுமார் 2 மாதத்துக்கும் மேலாக இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர்கள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளனர். அடுத்தாண்டு இங்கிலாந்து மண்ணில் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொடர் இந்திய வீரர்களுக்கு மிக முக்கியம்.

Sponsored


இதற்கிடையில், இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து நாட்டில் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட சிறிய தொடரில் விளையாடவுள்ளது. முதல் டி20 போட்டியானது இன்று டப்லின் மைதானத்தில்  நடைபெறுகிறது. இரண்டாவது டி20 போட்டி வரும் வெள்ளி (ஜூன் 29) அன்று இதே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக நல்ல பயிற்சிப் போட்டியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. சிறிய ஓய்வுக்குப் பின்னர் இந்திய கேப்டன் கோலியும் அணிக்குத் திரும்பியுள்ளார். நேற்று டப்லின் வந்த இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Photo Credis: BCCI/Twitter

இங்கிலாந்து நாட்டில் இருக்கும் தட்பவெட்ப நிலைக்கு வீரர்கள் தயாராவது மிக முக்கியம். அதற்கு இந்தத் தொடர் பெரிதும் உதவும்.  அயர்லாந்து மண்ணில் இந்தியா முதன் முதலாக டி20 தொடரில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30-க்கு துவங்குகிறது. Trending Articles

Sponsored