இந்தியாவுக்கு நூறாவது டி20! அயர்லாந்துக்கு என்ன பரிசு தரப்போகிறார் கோலி? #INDvsIRE



Sponsored



2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தயாராகிவரும் இந்திய கிரிக்கெட் அணி, இப்போது இருப்பது இங்கிலாந்தில். இங்கிலாந்து அணியுடனான 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பாக, டப்லின் நகரில் அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய அணி.

ஜூன் 27-ம் தேதி நடக்கும் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இந்திய அணி விளையாடும் 100-வது டி20 போட்டி. கோலி, தோனி, ரோஹித், தவான், ஹர்திக் பாண்டியா என பவர் ஹிட்டர்களுடன், பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் என பலமான பேஸ் அட்டாக்கையும், சாஹல், குல்தீப் யாதவ் என ஸ்பின்னர்களையும் வைத்திருக்கிறது இந்தியா.

Sponsored


இந்தியாவுடன் ஒப்பிடும்போது அயர்லாந்து மிகவும் சுமாரான அணிதான். அவர்கள் பெற்றிருக்கும் வெற்றிகளும் குறைவுதான். ஆனால், கவுன்ட்டி கிரிக்கெட்டில் கலக்கும் பல அதிரடி வீரர்களைக்கொண்டிருக்கும் அணி அயர்லாந்து. இந்தியா-அயர்லாந்து மேட்ச்சில் கவனிக்கவேண்டிய டாப் 5 வீரர்கள் இங்கே!

Sponsored


பால் ஸ்டிர்லிங்!

அயர்லாந்தின் பெஸ்ட் பேட்ஸ்மேன். இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் மிகவும் கவனிக்கப்படவேண்டியவர். பிரிட்டிஷ் ஸ்டைலில் பக்குவ ஆட்டம் ஆடுபவர் அல்ல பால் ஸ்டிர்லிங்... இறங்கிவந்து வெளுப்பதில் கில்லி. கடந்த ஆண்டு ஷார்ஜாவில் தொடங்கப்பட்ட டி10 லீக் போட்டிகளில் கேரளா கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்டிர்லிங்தான். 23 பந்துகளில் 52 ரன், 27 பந்துகளில் 66 ரன் எனப் பின்னியெடுக்கும் பேட்ஸ்மேன் இவர். சர்வதேச 20/20 போட்டிகளிலும் சிறப்பான பேட்ஸ்மேன் எனப் பெயரெடுத்திருக்கிறார்.  இதுவரை 48 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 8 அரை சதங்கள் அடித்திருக்கிறார்.  


வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்!

அயர்லாந்தின் முன்னாள் சூப்பர்ஸ்டார். அயர்லாந்தின் கேப்டனாகப் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தவர். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இவர் தலைமையிலான அயர்லாந்து அணி. 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 67 ரன் அடித்தார். ஆனால், இவர் ஒன் டே ஸ்பெஷலிஸ்ட் என்பதுதான் பிரச்னை. 20/20 போட்டிகளைப் பொறுத்தவரை இதுவரை  58 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஓப்பனிங் பேட்ஸ்மேனான இவர்  3 அரை சதங்கள்தான் அடித்திருக்கிறார்.  ஆவரேஜ் 20 ரன்தான். 

கெவின் ஓ பிரையன்!

அதிரடி மன்னனாகக் கலக்கியவர் கெவின் ஓ பிரையன். இவரை `அயர்லாந்தின் ஏபிடி' என்றுகூட சொல்லலாம். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் சென்சுரி அடித்தவர் என்கிற சாதனைக்கு இப்போதும் சொந்தக்காரர் கெவின்தான். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் பெளலிங்கைச் சிதைத்தார். 50 பந்துகளில் சதம் அடித்தார். ஆனால், இவருமே ஒன் டே ஸ்பெஷலிஸ்ட்தான். 20/20 போட்டிகளில் பெரிதாக ரன் அடித்ததில்லை. 63 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஆனால், அதிகபட்ச ஸ்கோரே  42 ரன்தான். 

கேரி க்ரெய்க் வில்சன்!

32 வயதான கேரி க்ரெய்க் வில்சன்தான் அயர்லாந்தின் கேப்டன். அதிரடியான பேட்ஸ்மேன் எல்லாம் கிடையாது. ஆனால், மிடில் ஆர்டரில் முக்கியமான சமயத்தில் ரன் எடுக்கக்கூடியவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். சமீபத்தில்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அயர்லாந்து அணிக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக விளையாடிவருகிறார். இதுவரை  57  டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். ஆனால், ஆவரேஜ் 23 ரன்தான். அயர்லாந்து தலைவனின் அதிகபட்ச ஸ்கோர்  65 ரன்.

ஜார்ஜ் டாக்ரெல்!

அயர்லாந்தின் ஸ்டார் பெளலர் இவர்தான். மிகவும் அனுபவம் வாய்ந்தவர். இடதுகை சுழற்பந்துவீச்சாளர். 50 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 58 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். எக்னாமிக்கலான பெளலரும்கூட. 

இந்தியாவின் பிளேயிங் லெவன் என்ன?

இங்கிலாந்து அணிக்கு எந்த பிளேயிங் லெவன் செட் ஆகும் என்பதைச் சோதிக்கும் போட்டிகளாக அயர்லாந்துக்கு எதிரான ஆட்டங்கள் இருக்கும். ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா என்பதுதான் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக இருக்கும். கே.எல்.ராகுல், விராட் கோலி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைப்பது டவுட்தான். அவருக்கு பதில் தினேஷ் கார்த்திக் விளையாட வாய்ப்புண்டு. தினேஷ் கார்த்திக் அணிக்குள் இருந்தால், தோனி வெறும் பேட்ஸ்மேனாக அணிக்குள் இருப்பார். ஆல்ரவுண்டர் ஸ்லாட்டில் ஹர்திக் பாண்டியா இருப்பார். புவனேஷ்வர் குமார், பும்ரா இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பார்கள். பாண்டியாவும் வேகப்பந்து வீசுவார் என்பதால் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை கோலி தேர்ந்தெடுக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கலாம். ஸ்பின்னர்கள் இந்த கண்டீஷனில் எப்படி ஆடுகிறார்கள் என்பதைச் சோதிப்பதற்காக  சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் ஸ்பின்னர்களாக அணிக்குள் இடம்பிடிப்பார்கள்.


அயர்லாந்து ஆட்டத்துக்குத் தயாராவோம்!



Trending Articles

Sponsored