காயத்தால் கே.எல்.ராகுல் அவதி! அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்Sponsoredஇந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, பௌலிங்கைத் தேர்வுசெய்தது.

Photo Credit: BCCI

Sponsored


இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கிடையேயான  இரண்டு போட்டிகள்கொண்ட டி20 கிரிக்கெட் டப்ளின் நகரில் நடக்கிறது. முதல் டி20 போட்டி, இன்று டப்ளின் மலாஹைட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இரண்டாவது டி20 போட்டி, வரும் வெள்ளி (ஜூன் 29) அன்று இதே மைதானத்தில் நடைபெறும்.

Sponsored


முதல்  டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் கேரி வில்சன், பௌலிங்கைத் தேர்வுசெய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ரோஹித்தும், தவானும் களமிறங்கியுள்ளனர். சிறிய ஓய்வுக்குப் பின்னர், இந்திய அணியின் கேப்டன் கோலியும் அணிக்குத் திரும்பியுள்ளார். அடுத்த மாதம் 3-ம் தேதி இங்கிலாந்துடன் நடைபெறும் தொடருக்கு, அயர்லாந்துடனான இந்தியாவின் ஆட்டம், நல்ல பயிற்சியாக இருக்கும் எனத் தெரிகிறது. ஐபிஎல் தொடரில் கலக்கிய கே.எல்.ராகுல், காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாடவில்லை. அதேநேரம், மணீஷ் பாண்டே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.Trending Articles

Sponsored