ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த ஜப்பான் அணிக்கு ஃபிஃபா அளித்த நாக்-அவுட் கிஃப்ட் Sponsoredப்பான் நாடு ஒழுக்கத்துக்குப் பெயர் போனது. பிரதமர் முதல் சாமன்யர் வரை விதிகளை முறையாகப் பின்பற்றுவார்கள். உலகக் கோப்பைத் தொடரிலும் முறையாக விதிகளைப் பின்பற்றி விளையாடியதால் ஃபிஃபா புதிய விதிமுறையின்படி உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் விளையாடும் வாய்ப்பு ஜப்பான் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.  நேற்றைய ஆட்டத்தில் ஏற்கெனவே தொடரை விட்டு வெளியேறிய போலந்து அணியை ஜப்பான் அணி எதிர்கொண்டது. முன்னதாக கொலம்பியா அணியை ஜப்பான் தோற்கடித்து, செனகல் அணியுடன் டிரா கண்டு 4 புள்ளிகள் பெற்றிருந்தன. ஆனால், போலந்து அணியிடம் எதிர்பாராமல் ஜப்பான் அணி ஒரு கோல் வாங்கி தோற்றது. 

அதேவேளையில் கொலம்பிய அணியிடம் ஒரு கோல் வாங்கி செனகல் அணியும் தோல்வி கண்டது. ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என ஜப்பான், செனகல் அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றிருந்தன. இந்தச் சூழ்நிலையில் இரு அணிகளில் எந்த அணி அதிக கோல் அடித்துள்ளதோ குறைவான கோல்கள் வாங்கியுள்ளதோ அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அப்படிப் பார்த்தாலும் இரு அணிகளும் தலா 4 கோல்கள் அடித்து 4 கோல்கள் பெற்றிருந்தன. அடுத்ததாக அந்த இரு நாடுகளுக்கிடையே நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். ஜப்பான் - செனகல் இரு அணிகளும் விளையாடிய ஆட்டமும் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்திருந்தது.

Sponsored


இதனால், விதிகளை முறையாகப் பின்பற்றி விளையாடிய வகையில் ஜப்பான் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியதாக ஃபிஃபா அறிவித்தது. அதாவது, ஒழுக்கமான ஆட்டத்தைப் பின்பற்றிய அணி என்ற வகையில் ஜப்பானுக்கு நாக்-அவுட் வாய்ப்பு கிடைத்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஜப்பான் அணி 4 மஞ்சள் அட்டைகளையும் செனகல் அணி 6 மஞ்சள் அட்டைகளும் பெற்றிருந்தன. குறைவான மஞ்சள் அட்டை பெற்றதன் அடிப்படையில், ஜப்பான் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 

Sponsored


உலகக் கோப்பையில் ஃபேர் ப்ளே வழியாக நாக்- அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி ப்ளு சமுராய்தான். ஆசியா சார்பில் நாக்-அவுட்டில் விளையாடப் போகும் ஒரே அணியும் இதுவே!. உலகக் கோப்பையிலிருந்து ஆப்ரிக்க அணிகள் அனைத்தும் வெளியேறி விட்டன. Trending Articles

Sponsored