உலகக்கோப்பை கால்பந்து - ஸ்பெயினை வெளியேற்றி காலிறுதிக்குள் நுழைந்தது ரஷ்யா!Sponsoredஉலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெனாலிட்டி ஷூட் அவுட் மூலம்  4-3 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி ரஷ்யா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

ரஷ்யாவில் நடந்து வரும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ஸ்பெயின் மற்றும் ரஷ்ய அணிகள் மோதின. நாக் அவுட் சுற்றின் விறுவிறுப்புக்கு ஏற்ப ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் செர்கய் ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷ்யா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதையடுத்து, ஆட்டத்தின் முதல்பாதியில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. கூடுதலாக வழங்கப்பட்ட முதல் 15 நிமிடங்களில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதற்கிடையே மழையும் பெய்ததால் ஆட்டத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது.

Sponsored


இறுதியாக, பெனால்டி ஷூட் முறை நடத்தப்பட்டது. இதில், ஸ்பெயின் 3 கோல்கள் அடித்தது. அதேவேளையில் ரஷ்யா கோல்கள் அடித்து அசத்தியது. இறுதியில் 4-3 என்ற கணக்கில் ரஷ்யா வெற்றிவாகை சூடி காலிறுதிக்கு முன்னேறியது. ஏற்கனவே போர்ச்சுக்கல், அர்ஜென்டினா போன்ற அனுபவம் வாய்ந்த அணிகள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மற்றொரு அனுபவம் நிறைந்த ஸ்பெயின் அணியும் உலகக்கோப்பையில் இருந்து நடைகட்டியுள்ளது அவர்களது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Sponsored
Trending Articles

Sponsored