`முதல் 5 நிமிடத்தில் கோல் மழை' - டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்த குரோஷியா!



உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் பெனாலிட்டி ஷூட் அவுட் மூலம்  3-2  என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி குரோஷியா  அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

Sponsored


ரஷ்யாவில் நடந்து வரும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டடத்தை எட்டியுள்ளது. அனுபவமில்லாத அணிகள் முக்கிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வருவதால் போர்ச்சுக்கல், அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றில் தோல்வியடைந்து தங்களது சொந்த நாட்டுக்கு நடையைக் கட்டி வருகின்றன. நாக் அவுட் சுற்றின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் டென்மார்க் - குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்களும் ஒருவர்க்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆடினர். அதன்பலனாக முதல் 4 நிமிடத்திலேயே இரு அணிகளும் கோல் அடித்து அசத்தின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்தில் டென்மார்க் அணியின்  மதியாஸ் ஜோர்ஜென்சன்  கோல் அடிக்க, 4வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் குரோஷியா - டென்மார்க் அணிகள் 1-1 எனச் சமநிலையில் இருந்தன. 

Sponsored


ஆனால் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் பெனால்டி ஷூட் முறை கொண்டுவரப்பட்டது. இதில் குரோஷியா  3 கோல்கள் அடிக்க, டென்மார்க் 2 கோல்கள் மட்டுமே அடித்தது. இதனையடுத்து 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதியில் நுழைந்தது குரோஷியா. 

Sponsored




Trending Articles

Sponsored