`இங்கிலாந்துக்கு கூடுதல் நெருக்கடி கொடுப்போம்' - விராட் கோலி!



இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் டி20 தொடர்  இன்று  ஓல்ட் டிராபோர்டில் உள்ள மான்செஸ்டரில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ``ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு அளித்த நெருக்கடியை விடவும் நாங்கள் அதிகமாக நெருக்கடி கொடுப்போம்" என்று கூறியிருக்கிறார். 

Sponsored


மேலும்  ``நாங்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் கிரிக்கெட் விளையாடப் போகிறோம். மன அழுத்தம், பயம், நெருக்கடி என்று எதுவும் இல்லாமல் வந்திருப்பதால் இங்கிலாந்து அணிக்குத்தான் கூடுடல் நெருக்கடியாக இருக்கும்.  இங்கிலாந்து மிகச்சிறந்த அணி. அவர்கள் மண்ணில் அவர்களை வீழ்த்துவதுதான் எங்களுக்குச் சிறப்பானது. கடந்த முறை இங்கிலாந்து இந்தியாவுக்கு வந்தபோது நாங்கள் கோப்பையை வென்றோம். இந்த முறையும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். இங்கிலாந்து அணியிலிருந்து கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி, ஜோஸ் பட்லர் ஆகியோர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். அனைவரிடமும் நட்பு இருக்கிறது. ஆதலால், இந்த முறை அனைத்துப் போட்டிகளும் நட்பு ரீதியில் செல்லும் என்று நம்புகிறோம். இந்த முறை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவது விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இங்கிலாந்து  நாட்டில் நிலவும் கால நிலை சற்று வித்தியாசமானது. புஜாரா, இசாந்த் சர்மா ஆகியோர் கவுண்டி போட்டியில் விளையாடி இருப்பதால், அவர்களுக்கு இந்தக் காலநிலை ஒத்துக்கொள்ளும். எங்களுக்கும் பழகிவிடும்.   

Sponsored


இந்தத் தொடர் முழுவதும் மகிழ்ச்சியான, நல்ல மனநிலையில் விளையாட விரும்புகிறோம். போட்டியின் முடிவுகளைக் கணிக்க முடியாது.  ஆனால், வெற்றிபெறும் மனநிலையைப் பெற்றுவிட்டால் அதுதான் எனக்கு கேப்டனாக பெருமை சேர்க்கும் விஷயமாகும். உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு இந்தத் தொடர்  உறுதுணையாக இருக்கும்" என்று விராட் கோலி தெரிவித்தார்.

Sponsored




Trending Articles

Sponsored