`முதல் பாதியில் மந்தம்; இரண்டாவது பாதியில் ஆக்ரோஷம்' - பெல்ஜியம் திரில் வெற்றி...!



Sponsored



பரபரப்பாக நடந்து முடிந்த  21-வது  உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றின் இன்றைய ஆட்டத்தில் கடைசி விநாடியில் கோல் அடித்து ஜப்பானுக்கு எதிராக  3 - 2  என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி  பெற்றிருக்கிறது பெல்ஜியம். உருகுவே, பிரான்ஸ்,  பிரேசில், ரஷ்யா, குரோஷியா வரிசையில் பெல்ஜியம் அணி ஆறாவதாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது. பெல்ஜியம் அணி 6-ம் தேதி நடைபெறவிருக்கும் காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணியை எதிர்கொள்கிறது. 

இன்று நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க முடியவில்லை. இரு அணி வீரர்களுமே எதிர் அணியினருக்குக் கடுமையான போட்டியை உருவாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், ஆட்டம் தொடங்கிய 48-வது நிமிடத்தில்  ஹராகுச்சி லாவகமாகக் கோல் அடிக்க ஜப்பான் அணி 1 - 0 என்று முன்னிலை பெற்றது. அதேநேரத்தில் கோல் அடிக்க பெல்ஜியம் வீரர்கள் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருந்த சூழலில் யாரும் எதிர்பாராதபடி 52-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் இனுய் கோல் அடிக்க 2 - 0 என்று ஜப்பான் முன்னிலை பெற்றது. பின்னர்  கடுமையாகப் போராடிய பெல்ஜியம் 69-வது நிமிடத்தில் வேடோன்கென்னும், 74-வது நிமிடத்தில் பெலோனியம் கோல் அடித்து பெல்ஜியம் வீரர்கள் 2 - 2 என்று சமன் செய்தார்கள். பரபரப்பாக நடந்துகொண்டிருந்த சூழலில் ஆட்டம் முடியப்போகும் கடைசி சில வினாடிகளில் யாரும் எதிர்பாராதபடி மியூனர் தள்ளிய பந்தை சாதால் கோலடித்து ஜப்பானுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். இதன் மூலம்  3 - 2 என்ற கணக்கில் யாரும் எதிர்பாராதபடி பெல்ஜியம் ஆறாவது அணியாக காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. வெற்றியின் விளிம்பு வரை சென்ற ஜப்பான் கடைசி நேரத்தில் செய்த தவறால் பரிதாபமாக வெளியேறியிருக்கிறது.

Sponsored


Sponsored




Trending Articles

Sponsored