``அவர் ஓய்வு பெற்றால் நானும் ஓய்வு பெறுகிறேன்” யாரைச் சொல்கிறார் செரீனா வில்லியம்ஸ்?



Sponsored



இங்கிலாந்து நாட்டில் பிரபல கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. தற்போது முதல்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஃபெடெரர், செரீனா வில்லியம்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர் வீராங்கனைகள் இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினர். 

செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் உலகில் பல ஆண்டுகளாக முன்னணி வீராங்கனையாகத் திகழ்பவர். 2002-ம் ஆண்டு முதன் முறையாகப் பெண்கள் ஒற்றையர் டென்னிஸில் முதலிடம் பிடித்த செரீனா, பின்னர் பெரும்பாலான நேரங்களில் அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். கடந்த ஆண்டு அவர் கர்ப்பமானதால், 12 மாதங்கள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகி இருந்தார். இந்த இடைவெளிக்குப் பின்னர் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் எனப் பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் இந்தாண்டு நடைபெற்ற பிரென்ச் ஓப்பன் தொடரில் அதிரடியாகப் பங்கேற்றார். ஆனால், காயம் காரணமாக அவர் பாதியில் வெளியேறிவிட்டார். அப்போதும் அவரின் ஓய்வு குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது. 

Sponsored


ஆனால், காயத்தில் இருந்து மீண்டு வந்த வில்லியம்ஸ் தற்போது விம்பிள்டன் தொடரில் பங்கேற்று வருகிறார். இந்தத் தொடரில் செரீனா வெற்றியுடன் தனது ஓய்வை அறிவிப்பார் என்று மீண்டும் ஓய்வு குறித்த பேச்சுகள் வலம் வர, விம்பிள்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அவர் பேசினார். அப்போது  அவர், ``ரோஜர் ஃபெடரர் எத்தனை காலம் விளையாடுவார்? அவர் ஏதேனும் கணக்கு வைத்திருக்கிறாரா? அவர் எத்தனை காலம் விளையாடுவாரோ, அத்தனை காலம் நானும் விளையாடுவேன். இதை நான் முயற்சி செய்யப்போகிறேன்” என்றார் நகைச்சுவையாக. இருவருக்கும் 36 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை செரீனா 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களும், ஃபெடரர் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Sponsored




Trending Articles

Sponsored