`சொதப்பிய ஓப்பனிங் பேட்டிங்' - இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!Sponsoredஇந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20யில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. 

@ICC

Sponsored


இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றியை ருசித்த நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஜேக் பால் இன்றைய போட்டி மூலம் அறிமுகமானார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி  அளித்தனர். முதல் 5 ஓவருக்கு உள்ளாகவே ரோஹித், தவான், ராகுல் மூவரும் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி தடுமாறியது. எனினும் கேப்டன் விராட் கோலி தாக்குப்பிடித்து ஆடினார். அவருக்கு உறுதுணையாக சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோர் விளையாடினர். 

Sponsored


இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து திருப்திப்பட்டுக்கொண்டது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 47 ரன்களும், தோனி 32 ரன்களும் எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர்களும், இந்திய தொடக்க வீரர்களைப் போல் சொதப்பலாக ஆடினர். ராய், பட்லர், ரூட் மூவரும் சொதப்ப, பின்னர் வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் நிதானம் காட்டினார். இதனால் இங்கிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது. கடைசிக் கட்டத்தில் இந்திய பௌலர்கள் ரன்களை கட்டுப்படுத்தத் தவறவே, 2 பந்துகள் மீதம் இருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணி தரப்பில் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1 - 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. Trending Articles

Sponsored