`மெஸ்ஸி, ரொனால்டோவைத் தொடர்ந்து நெய்மரும் அவுட்' - அரையிறுதியில் பெல்ஜியம்...!Sponsoredரபரப்பாக நடைபெற்ற உலகக்கோப்பைக் கால்பந்து காலிறுதிப் போட்டியில் 2 - 1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி பெல்ஜியம் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. நாக் அவுட் சுற்றுகள் முடிந்து இன்று நடந்த முதல் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி உருகுவே அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் பிரேசிலும், பெல்ஜியமும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் அதிரடியாக விளையாடிய பெல்ஜியம் அணி இரண்டு கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது.  ஆட்டம் தொடங்கிய 13-வது நிமிடத்தில் பெர்னாண்டினோவும், 31-வது நிமிடத்தில் கெவினும் அசத்தலாகக் கோல் அடித்தனர். முதல் பாதியில் பிரேசில் எவ்வளவு முயற்சி செய்தும் அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 

Sponsored


முதல் பாதியில் 2 - 0 என்று பின்தங்கிய நிலையில் கோலடிக்க முடியாமல் தொடர்ந்து விளையாடிய பிரேசில் 76-வது நிமிடத்தில்தான் முதல் கோலை அடித்தது. பிரேசிலின் முதல் கோலை அகஸ்டினோ அடித்தார். அதன் பிறகு பெல்ஜியம் அணி வீரர்களின் தடுப்பைத் தகர்த்து பிரேசில் வீரர்களால் ஒரு கோலைக்கூட அடிக்க முடியவில்லை. கோல் அடிப்பதற்குக் கிடைத்த பல்வேறு வாய்ப்புகளையும் வீணடித்த பிரேசில் பரிதாபமாக 2 - 1 என்ற கோல் கணக்கில் தோற்று வெளியேறியிருக்கிறது. ஏற்கெனவே, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற முன்னணி வீரர்கள் ரசிகர்களை ஏமாற்றிவிட்டு வெளியேறிய நிலையில், ரசிகர்களின் மற்றொரு எதிர்பார்ப்பாக இருந்த நெய்மரும் இன்று கோல் ஏதும் அடிக்காமல் ஏமாற்றினார்.

Sponsored


வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறவிருக்கும் அறையிறுதிப் போட்டியில் பெல்ஜியமும், பிரான்சும் மோதவிருக்கின்றன.Trending Articles

Sponsored