கார்த்திக் உள்ளே... ரெய்னா வெளியே... இங்கிலாந்தை ஆச்சரியப்படுத்துங்கள் கோலி! #ENGvINDSponsoredடி20 தொடரை இந்தியா ஈஸியாகக் கைப்பற்றிவிடும் என்கிற நம்பிக்கையை முதல் டி20 போட்டி கொடுத்தது. குல்தீப்பின் சுழற்பந்தும், கேஎல் ராகுலின் அதிரடி ஆட்டமுமே அதற்குக் காரணம். ஆனால், அடுத்தப் போட்டியிலேயே விக்கெட்டே கொடுக்காமல் சிக்ஸர், பவுண்டரி என குல்தீப்பின் ஓவர்களை அசால்ட் செய்தது இங்கிலாந்து. ராகுலின் பேட்டிங்கையும் சிங்கிள் டிஜிட்டில் முடித்தார்கள். இரண்டாவது போட்டியை வென்று சீரிஸை 1-1 டிசைடருக்கு கொண்டுவந்திருக்கிறது இங்கிலாந்து. 

சர்ப்ரைஸ் கொடுங்கள் கோலி?

Sponsored


பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே இங்கிலாந்தைவிட ஸ்ட்ராங்கான அணி இந்தியா. ஆனால், இங்கிலாந்தைப்போல ஒவ்வொரு ப்ளேயருக்கும் ஒரு அப்ரோச் என்கிற அணுகுமுறை இந்தியாவிடம் இல்லை. முதல் இரண்டு போட்டியிலும் ப்ளேயிங் லெவனை கோலி மாற்றவில்லை. ஆனால் மூன்றாவது போட்டியில் மாற்றங்கள் இருந்தால்தான் அது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Sponsored


சுரேஷ் ரெய்னா மூன்றாவது டவுனில் இறங்குகிறார். டி20 போட்டிகளில் அவருக்கான இடம் அது இல்லை. அந்த இடத்தில் அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை களமிறக்கலாம். தினேஷ் கார்த்திக் ஃபார்மில் இருக்கிறார் என்பதோடு, இங்கிலாந்து கண்டிஷனில் சமாளித்து ஆடக்கூடியவர். ஆனால் ரெய்னாவுக்கு பதில் இன்னொரு ஆல் ரவுண்டர் தேவையென்றால் க்ருணால் பாண்டியாவை அணிக்குள் கொண்டுவரலாம். 

ஷிகர் தவான் முதல் இரண்டு போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்கான ஓப்பனிங் இடத்தை இப்போது மாற்றமுடியாது என்பதால் ஷிகர் தவான் அணியில் நீடிப்பார் என்றே எதிர்பார்க்கலாம்.

பெளலிங்கைப் பொறுத்தவரை இன்று போட்டி நடைபெற  இருக்கும் பிரிஸ்டல் மைதானம் பெளலிங்கிற்கு சாதகமானதே. ஆனால் ஸ்பின்னுக்கு அல்ல, வேகப்பந்து வீச்சுக்கு. இங்கிலாந்து ஒரே ஸ்பின்னரைக் கொண்டே போன மேட்ச் விளையாடியது. ஆனால் இந்தியாவில் சாஹல், குல்தீப் என ஒரு வலது, இடது கை ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சைப் பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய தீபக் சாஹருக்கு வாய்ப்பளிக்கலாம். ஆனால் யாருக்கு பதில் சாஹர் உள்ளே வருவார்? இரண்டு ஸ்பின்னர்களில் ஒரு ஸ்பின்னரை இழக்க கோலி விரும்புவாரா என்பதெல்லாம் பெரிய கேள்வி. ஆனால், இன்று அதிரடியான சில முடிவுகளை எடுத்தால் மட்டுமே டி20 தொடரைக் கைப்பற்ற முடியும்.

பென் ஸ்டோக்ஸ் வருகிறார்?

இங்கிலாந்தைப் பொறுத்தவரை பேட்டிங் ஆர்டரில் அவர்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. இங்கிலாந்தின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேனான ஜோ ரூட் 20/20 போட்டிகளில் திணறுகிறார். இந்த சீரிஸிலும் சொதப்பலே. அதனால் அவருக்கு பதிலாக காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் வரலாம். ஐபிஎல் போட்டிகளில் ஸ்டோக்ஸ் பெரிய ஏமாற்றத்தைத் தந்தவர். ஆனால், இந்திய பிட்ச்களையும், இங்கிலாந்து பிட்ச்களையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அவரது ஆல் அவுண்ட் பெர்ஃபாமென்ஸ் இங்கிலாந்தில் பக்காவாகப் பொருந்தும்.பென் ஸ்டோக்ஸ் உள்ளே வந்தால் மொயின் அலி அணிக்குள் வருவார். இரண்டு ஸ்பின்னர்களோடு இங்கிலாந்து விளையாடும்.

டாஸ்!

மிகவும் சிறிய மைதானம் இது. அதனால் ஸ்பின்னர்களின் ஓவர்களை அடித்து விளையாடலாம். இங்கிலாந்து போன மேட்ச்சில் செய்ததுபோல ஷார்ட் பிட்ச் பால்கள் கைகொடுக்கும். அதனால் புவனேஷ்வர், உமேஷ் என இந்திய பெளலர்களும் ஷார்ட் பிட்ச் பந்துகளால்தான் விக்கெட் எடுக்க முடியும். யார் முதலில் ஆடினாலும் 160 ரன்கள் என்பது வின்னிங் ஸ்கோராக இருக்கும்.Trending Articles

Sponsored