`தீபக் சஹார் அறிமுகம்; குல்தீப் யாதவுக்கு ஓய்வு!’ - இந்திய அணி ஃபீல்டிங் தேர்வுஇங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். 

Sponsored


Photo Credit: BCCI

Sponsored


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவுக்குப் பின்னர் டெஸ்ட் தொடர் நடத்தப்படவிருக்கிறது. முதல் 2 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டி பிரிஸ்டோல் நகரில் நடக்கிறது. நடப்புத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருப்பதால், இன்றைய போட்டியில் வெல்லும் அணி கோப்பையை வெல்லும். கடந்த 2 போட்டிகளிலுமே சேசிங் செய்த அணியே வென்றிருக்கிறது. 

Sponsored


Photo Credit: BCCI

இந்த நிலையில், பிரிஸ்டோல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்களைக் கேப்டன் விராட் கோலி செய்திருக்கிறார். புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக தீபக் சஹார் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, இந்தப் போட்டி மூலம் தீபக் சஹார் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகிறார். போட்டிக்கு முன்னதாக, அவருக்கு இந்திய அணியின் தொப்பியை கேப்டன் விராட் கோலி வழங்கினார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டுக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். Trending Articles

Sponsored