தங்கம் வென்ற தீபா கர்மாகர்..! பிரதமர் மோடி வாழ்த்துSponsoredதுருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை தீபா கர்மாகருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டிலுள்ள மெர்சின் நகரில் ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் கலந்துகொண்டார். அதில், 14.15 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அவர், ஏற்கெனவே 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நான்காம் இடத்தைப் பிடித்தவர். அவர், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு, இரண்டு வருடம் ஓய்வுக்குப் பிறகு இந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் கலந்துகொண்டார்.

Sponsored


Sponsored


உலகக் கோப்பைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீபா கர்மாகருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், 'தீபா கர்மாகரால் இந்தியா பெருமையடைகிறது. துருக்கியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தீபாவுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி அவருடைய விடா முயற்சிக்கான பெருமைமிகு உதாரணம்' என்று பதிவிட்டுள்ளார். Trending Articles

Sponsored