ஒரே நாளில் கோப்பை! - டி20 ரேங்க்கில் பாகிஸ்தான், இந்தியா ஆதிக்கம்Sponsoredஐ.சி.சி வெளியிட்டுள்ள சர்வதேச டி20 ரேங்க்கிங்கில் பாகிஸ்தான் முதலிடமும், இந்தியா இரண்டாவது இடமும் பிடித்துள்ளன.

Photo Credit: Twitter/BCCI

Sponsored


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடருக்குப் பிந்தைய தர வரிசைப் பட்டியலை சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசையில், ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலிடம் பிடித்துள்ளார். டி20 வரலாற்றில் முதல்முறையாக 900 புள்ளிகளைப் பெற்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஹராரேவில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியில், அவர் 172 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அந்தப் போட்டியின் முடிவில், அவர் 900 புள்ளிகளை எட்டினார். தற்போது அவர், 891 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருக்கிறார். அதேபோல, பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமான் 44 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்திருக்கிறார். இந்திய அணியின் கே.எல்.ராகுல், 3-வது இடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் நியூஸிலாந்தின் காலின் முன்ரோ 4-வது இடத்திலும், பாகிஸ்தானின் பாபர் ஆசம் 5-வது இடத்திலும் இருக்கின்றனர். முதல் 10 இடங்களில் கே.எல்.ராகுலைத் தவிர வேறு இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. ரோஹித் ஷர்மா 11-வது இடத்தையும், விராட் கோலி 12-வது இடத்தையும் பிடித்திருக்கின்றனர். 

Sponsored


Photo Credit: Twiter/PCB

பந்துவீச்சாளர்கள் தர வரிசையில், ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் முதலிடத்திலும், பாகிஸ்தானின் ஷதாப் கான் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்தின் இஷ் சோதி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். 3-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் யுஷ்வேந்திர சாஹல் ஓர் இடம் பின்தங்கி, 4-வது இடம் பிடித்திருக்கிறார். சாஹல் தவிர மற்ற இந்திய வீரர்கள் எவரும் முதல் 20 இடங்களுக்குள் இல்லை. ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். அணிகளைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணி 132 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இருக்கின்றன.  ஜிம்பாப்வே - ஆஸ்திரேலியா அணிகளுடன் பங்கேற்ற முத்தரப்பு தொடரில், பாகிஸ்தான் அணி கோப்பை வென்ற அதேநாளில், இங்கிலாந்து அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி வென்று, கோப்பையைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது
 Trending Articles

Sponsored