இவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்தான், நம்புங்க!Sponsoredகிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்ட இந்திய வீரர் ஸ்ரீசாந்த், தற்போது பாடிபில்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

ஸ்ரீசாந்த் இந்தியக் கிரிக்கெட்டில் இளம்வயதில் உச்சத்தைத் தொட்டவர், அதே வேகத்தில் சரிவையும் சந்தித்தவர். டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராகவே இருந்தார். சர்ச்சைக்குச் சொந்தக்காரராகவும் வலம் வந்துகொண்டிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சைமண்ட்ஸை வம்புக்கு இழுத்தது. ஐ.பி.எல் போட்டியில் ஹர்பஜன் சிங்கிடம் அடிவாங்கியது எனப் பரபரப்பாகப் பேசப்பட்டார். 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடியபோது சூதாட்டப் புகாரில் சிக்கினார். இதையடுத்து  கிரிக்கெட் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. `தடையிலிருந்து மீண்டும் வருவேன். நான் குற்றமற்றவன் என நிரூபிப்பேன்' என்றார்.

Sponsored


தடையால் தன் வாழ்க்கை முடிந்துபோனதாக அவர் என்னவில்லை. பிற துறையில் தனது கவனத்தைத் திருப்பினார். தற்போது பாடி பில்டிங்கில் ஆர்வம் செலுத்தி வரும் ஸ்ரீசாந்த், தன் உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார். இதுதொடர்பாகப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்ரீசாந்த் தனது இன்ஸ்டாகிராமில் (Instagram) வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவில் சிலர் ஹர்பஜனை வம்புக்கு இழுந்துள்ளனர். ஸ்ரீசாந்த்திடம் தற்போது நெருங்குவாரா ஹர்பஜன் எனக் கமென்ட் செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு அவர் நடிப்பில் டீம் 5 ( Team 5) என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை ஸ்ரீசாந்த் தனது அடுத்த படத்துக்குத் தயாராகி வருகிறாரோ என்னவோ?.

Sponsored


 

#hard work# love

A post shared by Sree Santh (@sreesanthnair36) onTrending Articles

Sponsored