உலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது குரோஷியா!Sponsoredஉலகக்கோப்பைக் கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய குரோஷியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வென்ற குரோஷியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

முதலாவது அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் முதலில் அடியெடுத்து வைத்தது பிரான்ஸ். இரண்டாவது அரையிறுதியில் வெல்லப்போவது யார் என்று கணிப்பது மிகச் சவாலாக இருந்தது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதின. முதல் கோலை அடிக்கப்போவது யார் என்ற பரபரப்பு தொடங்கியபோது ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணியின் கிரண் டிரிப்பர் கோல் அடித்து அரங்கை அதிர வைத்தார். முதல் பாதியின் முடிவு வரை குரோஷியா கோல் ஏதும் அடிக்கவில்லை. 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியின்போது 68 நிமிடத்தில் குரோஷியா போராடி கோல் அடித்தது. அந்நாட்டு வீரர் இவான் பெர்சிக் அந்த கோலை அடித்தார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது. 

Sponsored


இதையடுத்து முதல் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை, இரண்டாவது கூடுதல் நேரத்தின்போது 109 நிமிடத்தில் குரோஷியாவின் மாரியோ கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என்கிற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியின் வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குரோஷியா. வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது குரோஷியா.

Sponsored
Trending Articles

Sponsored