இன்று தொடங்குகிறது ஒருநாள் தொடர் - அணிக்குத் திரும்புவாரா புவனேஷ்வர் குமார்?



Sponsored



இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில்,  2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இந்நிலையில், இன்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது. 

Picture: Twitter/BCCI

Sponsored


ஐ.சி.சி தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியும் மோதுவதால், இந்தப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு, இங்கிலாந்து மண்ணில் உலகக் கோப்பைத் தொடர் நடக்கவிருப்பதால், இந்திய அணிக்கு இந்தத் தொடர் மிக முக்கியமானதாகும். கிட்டத்தட்ட இதே அணி அடுத்த ஆண்டு உலக்கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதால், ஒவ்வொரு வீரரின் செயல்பாடும் கண்காணிக்கப்படுகிறது. 

Sponsored


இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, ஒருநாள் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணியைத் துவம்சம் செய்த நம்பிக்கையில் களம் இறங்குகிறது. எனினும், இந்தியா தற்போது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடுவதால், இங்கிலாந்து அணி வெற்றிபெற கடுமையாகப் போராட வேண்டும். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை அதிரடி பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள்தான்அதன் பலம். 

இந்திய அணிக்கு இந்தத் தொடர் சிறப்பாகவே தொடங்கியது. முதலில் ஆடிய டி 20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா, தற்போது அந்த நம்பிக்கையுடன் ஒருநாள் தொடரை தொடங்க முயலும். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் பெரும் பலம் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா. ஆனால், பும்ரா காயம் காரணமாக நாடு திரும்பிவிட்டார். அவர், டெஸ்ட் தொடருக்கு முன்னதாகத் தயார் ஆவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடைசி டி20 போட்டியில், காயம் காரணமாகப் பங்கேற்காத புவனேஷ்வர் குமார், இன்னும் முழுமையான பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர், அணிக்குத் திரும்புவாரா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. எனினும், ஐ.பி.எல் தொடரில் இருந்த ஃபார்மை உமேஷ் யாதவ் இங்கிலாந்து மண்ணில் தொடர்வது இந்திய அணிக்குச் சாதகமான விஷயம். அவருடன் ஷ்ரதுல் தாக்கூர் அல்லது சித்தார்த் கவுல் களம் இறங்கலாம். ஸ்பின்னர்களாக சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவர் இறங்கவே அதிக வாய்ப்பு  உள்ளது. 

இந்த மைதானத்தைப் பொறுத்தவரை பேட்டிங் செய்ய சாதகமான சூழலே உள்ளது.  அதனால், இன்றைய போட்டியில் இரு அணிகளும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. முதல் ஒருநாள் போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
 



Trending Articles

Sponsored