ரோஹித் அதிரடி..! 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிSponsoredஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி, 49.5 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர்.

Sponsored


ஷிகர் தவான் 40 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து விராட் கோலி களமிறங்கினார். ரோஹித்தும், கோலியும் எதிரணியின் பந்துகளை சிதறடித்தனர். அதிரடியாக ஆடிய கோலி 75 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 137 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி, 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பில் 269 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

Sponsored
Trending Articles

Sponsored