சர்வதேச தடகளத்தில் சரித்திர சாதனை படைத்தார் ஹிமா தாஸ்!Sponsoredஇதுவரை இந்தியாவில் யாரும் செய்திடாத சாதனை. 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் தற்போது பின்லாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, ஒரு சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமாதாஸ். 

அஸ்ஸாமின் நாகான் நகரைச் சேர்ந்த 18 வயதான ஹிமாதாஸ், 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியளவில் மிக முக்கியமான வீராங்கனை. கடந்த ஏப்ரல் மாதம் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இறுதிவரை முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார். அதில் வெற்றிபெறாவிட்டாலும்கூட, பந்தய தூரத்தை 51.32 விநாடிகளில் அவர் கடந்தது இந்தியளவில் மிகப்பெரிய சாதனை. தற்போது பின்லாந்தின் டாம்பயர் நகரில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச போட்டியிலும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 

Sponsored


காலிறுதி, அரையிறுதி சுற்றுகளைக் கடந்து இறுதி ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இதில் பந்தய தூரத்தை 51.46 விநாடிகளில் கடந்தார். இவருக்கு அடுத்தபடியாக, ரோமானியாவைச் சேர்ந்த ஆன்ட்ரியா மிக்லஸ் 52.07 விநாடிகளில் கடந்து இரண்டாமிடத்தைப் பிடித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த டேலர் மேன்சன் 52.28 விநாடிகளில் கடந்து மூன்றாமிடத்தைப் பிடித்தார். தன்னுடைய இந்த வெற்றியின் மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார் ஹிமா தாஸ். 

Sponsored
Trending Articles

Sponsored