விம்பிள்டன் அரையிறுதி: நடாலை வீழ்த்தி ஃபைனலுக்குள் நுழைந்தார் ஜோகோவிச்Sponsoredவிம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. உலகின் டாப் வீரர்களான ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். உலகளவில் நடால் 2ஆம் நிலையிலும், ஜோகோவிச் 12ஆம் நிலையிலும் உள்ளனர். இவர்கள் இருவருமே பல கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருப்பதால் இன்றைய போட்டி உலகளவில் கவனம் ஈர்த்தது. 

முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-3 என நடால் கைப்பற்றினார். அதேபோல் மூன்றாவது செட்டை 7-6 என ஜோகோவிச்சும், நான்காவது செட்டை 6-3 என நடாலும் கைப்பற்றினர். இறுதியாக ஐந்தாவது செட்டை கைப்பற்றுபவர்களே வெற்றியாளர் என்ற நிலைக்கு ஆட்டம் வந்தபோது அரங்கத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருவருமே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இறுதியில் 5வது செட்டை 10-8 எனக் கைப்பற்றி நடாலை வீழ்த்தினார் ஜோகோவிச். இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஜோகோவிச், தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை எதிர்கொள்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored