உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி - முதல் பாதியில் முன்னிலை பெற்ற பிரான்ஸ்!



Sponsored



உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

ஒரு மாத காலமாக நடந்து வந்த ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தொடரில் முக்கிய அணிகளுக்கு சிறிய அணிகள் அதிர்ச்சி அளித்தன. இதனால் இந்த தொடர் முழுவதுமே எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் இருந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் சீக்கிரமே நடையை கட்டின. அதேபோல் யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக குரோஷியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேலும் பிரான்ஸ் அணியும் மீண்டும் உலகக்கோப்பை பைனலுக்கு நுழைந்துள்ளது. இந்த இரு அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. இதில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினர். 

Sponsored


ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திய பிரான்ஸ்க்கு கோல் கிடைத்தது. தலையால் முட்டி குரோஷிய வீரர் மேண்ட்சுகிச் தடுக்க முயல, ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. இதேபோல் ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் குரோஷியாவிற்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி குரோஷியா கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் 38வது நிமிடத்தில் கோல் ஏரியாவுக்குள் வைத்து குரோஷியா பவுல் செய்ய பிரான்ஸுக்கு பெனால்டி கிடைத்தது. இதை அசத்தலாக பயன்படுத்திய பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான், கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2 - 1 என முன்னிலை வகிக்கிறது.

Sponsored




Trending Articles

Sponsored