உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தலைவர்கள் வாழ்த்து!



உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம்  பெற்ற பிரான்ஸ்க்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Sponsored


கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இன்றுடன் நிறைவடைந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும், அனுமானங்களையும் நொறுக்கி தள்ளியது.இந்தாண்டு கால்பந்து போட்டிகள். நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்ட அணிகள் அனைத்தும் போட்டியிலிருந்து அடுத்தடுத்து வெளியேற, இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைத்தது,
குரோஷியா- பிரான்ஸ் அணிகள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியில் தொடர்ந்து முன்னிலை பெற்ற பிரான்ஸ் அணி, 4-2 என்ற கோல் கணக்கில், குரோஷியாவை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது. பிரான்ஸ் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடித்தீர்த்தனர்.

Sponsored


Sponsored


இந்நிலையில், உலக கோப்பை கால்பந்து போட்டி சாம்பியனான, பிரான்ஸ் அணிக்கு  பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது
ட்விட்டரில் `அற்புதமான ஆட்டம். சாம்பியன் பட்டம் பெற்ற பிரான்ஸூக்கு வாழ்த்துக்கள்;கால்பந்து தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். உற்கசாகமாக  குரோஷியாவுக்கும் எனது வாழ்த்துக்கள். உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியாவின் செயல்பாடு வரலாற்று சிறப்பு வாய்ந்தது.’ என்று தெரிவித்துள்ளார். அதே போல குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் `உலக கோப்பை போட்டியில் வெற்றிபெற்ற பிரான்ஸூக்கு வாழ்த்துக்கள்.

குரோஷியாவுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ` அதிரடியாக ஆடிய பிரான்ஸூக்கு வாழ்த்துக்கள். சிறப்பான முறையில் தொடரை நடத்திய ரஷ்ய அதிபருக்கு வாழ்த்துக்கள்’என்று தெரிவித்துள்ளார். அதே போல புதுச்சேரி முதல்வர் நாரயணசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



Trending Articles

Sponsored