இந்திய ஏ அணிக்காகக் களமிறங்கும் முரளி விஜய், ரஹானே!



Sponsored



இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கு முன்னதாக, முரளி விஜய் மற்றும் ரஹானே ஆகியோர் இந்திய ஏ அணிக்காக விளையாட உள்ளனர்.

இந்திய அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், கோப்பை யாருக்கு என்பதை முடிவுசெய்யும் இறுதி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. அதன் பின்னர், ஆகஸ்ட் மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. 

Sponsored


இந்நிலையில், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்திய ஏ அணி விளையாடும் டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர்களான முரளி விஜய் மற்றும் ரஹானே ஆகியோர் விளையாட உள்ளனர். இவர்கள் இருவரும் ஒருநாள் மற்றும் டி20 அணிக்குத் தேர்வாகாதபோதும் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக, இங்கிலாந்து மண்ணில் உள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக்கொள்ள இந்தப் போட்டி உதவும் என்பதால், இந்தப் போட்டியில் இருவரும் விளையாடுகிறார்கள் எனக் கூறப்படுகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு விரைவில் இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படுமா அல்லது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் கலக்கிய குல்தீப் யாதவ், சஹால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  



Trending Articles

Sponsored