பால் டேம்பரிங்கில் சிக்கிய இலங்கைக் கேப்டன் சண்டிமால்..! சொந்த மண்ணில் விளையாட முடியாத சோகம்Sponsoredபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கைக் கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2 டெஸ்ட் மற்றும் 4 ஒரு நாள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சண்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியின்போது இலங்கை கேப்டன் சண்டிமால் பந்தைச் சேதப்படுத்தியதாகப் போட்டி நடுவர்கள் சந்தேகித்தனர். விசாரணையில் சண்டிமால் மீதான குற்றம் நீருபிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு டெஸ்ட் போட்டி அல்லது இரண்டு ஒருநாள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் விளையாடத் தடையும் போட்டிக்கான ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டது. 

Sponsored


இந்த வருடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மூவர், இலங்கை வீரர் சண்டிமால் உள்ளிட்டோர் பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கியதையடுத்து ஐ.சி.சி கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Sponsored


இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கைக் கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர், மேலாளர் ஆகியோருக்கு  2 டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. தடையின் காரணமாக இனி வரும் போட்டிகளில் தினேஷ் சண்டிமால் களமிறங்கமாட்டார்.Trending Articles

Sponsored