பிரான்ஸ் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு!உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கோப்பையைக் கைப்பற்றி நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Sponsored


உலககோப்பை கால்பந்து போட்டிகள் திருவிழாபோல நடைபெற்று முடிந்தன. மிகுந்த எதிர்பார்ப்பும், ஆர்வமும் ஒவ்வொரு போட்டியிலும் கூடிக்கொண்டே சென்றது. காரணம், நட்சத்திர ஆட்டக்காரர்கள் இடம்பெற்றிருந்த அணிகள் அடுத்தடுத்து வெளியேற, யார் இறுதிப்போட்டிக்குள் நுழைவார்கள் என்ற கேள்வி கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வத்தைக் கூட்டியது. இறுதியில் பிரான்ஸும் குரோஷியாவும் களத்தில் எதிரெதிர் அணிகளாய் நின்று இறுதிப்போட்டியில் களமாடின.

Sponsored


Sponsored


பிரான்ஸின் அதிரடி ஆட்டம் குரோஷியாவை தடுமாறச்செய்தது. இருந்தபோதிலும் குரோஷியா தொடர்ந்து ஈடுகொடுத்தே வந்தது. ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற கோல்கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். பிரான்ஸ் மக்களிடையே ஆனந்தக்கண்ணீர் ததும்பியது.

பிரான்ஸின் வெற்றிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், கோப்பையைக் கைப்பற்றிய பிரான்ஸ், நாடு திரும்பியது. அந்நாட்டின் தலைநகரான பாரீஸில்,  பிரான்ஸ் வீரர்களை வரவேற்பதற்காக லட்சக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் குழுமியிருந்தது. வீரர்கள் வருவதைக் கண்டதும் வழிநெடுங்கிலும் நின்றுகொண்டிருந்த ரசிகர்கள், அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்; தொடர்ந்து அவர்கள் கோஷங்களை எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


 Trending Articles

Sponsored