விராட் கோலியின் அரைசதம்; ஷர்துல் தாகூரின் கேமியோ! - இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் இலக்குஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.

Sponsored


Photo Credit: BCCI

Sponsored


விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், ஒருநாள் தொடரின் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து ரோஹித் ஷர்மாவும் - தவானும் இந்தியாவின் இன்னிங்ஸைத் தொடங்கினர். தடுமாற்றத்துடன் விளையாடிய  ரோஹித் 18 பந்துகளில் 2 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின்னர் கேப்டன் கோலியும் - தவானும் இணைந்தனர். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த தவான், ஒரு ரன்னுக்கு அவசரப்பட்டு ரன் அவுட் ஆகி 44 ரன்களில் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் ரஷீத் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். பேட்டில் பட்ட பந்து ஸ்டெம்பை பதம்பார்த்தது. அரை சதம் கடந்த கேப்டன் கோலியும் 71 ரன்களில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். சற்றுதாக்குப்பிடித்த தோனி 42 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்ட, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. கடைசிப் பந்தில் புவனேஷ்வர்குமார் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Sponsored
Trending Articles

Sponsored