முடிவுக்கு வந்தது இந்திய அணியின் தொடர் வெற்றி! #ENGvsIND



இந்திய கேப்டனாக விராட் கோலி பதவியேற்றதிலிருந்து, இந்திய அணி முதல்முறையாக இரண்டு நாடுகள் மோதும் ஒருநாள் தொடரில் தோல்வியடைந்துள்ளது.

Sponsored


இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றார். கடைசியாக 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

Sponsored


அதன்பிறகு, இரண்டு  நாடுகளுக்கெதிரான போட்டிகளில் இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவித்துவந்தது. அதன்பிறகு, 2017-ம் ஆண்டு  தொடக்கத்தில், இந்திய அணி கேப்டனாக விராட் கோலி பொறுப்பேற்றார். அதன்பிறகு, இந்திய மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தியது. அதேபோல, வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளையும் தொடர்ச்சியாக வீழ்த்தியது. சுமார், இரண்டரை ஆண்டுகளாக இரு நாடுகள் மோதும் போட்டிகளில் இந்திய அணி தொடர் வெற்றிகளைக் குவித்துவந்தது.

Sponsored


அந்தச் சாதனை, நேற்று இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்ததுடன் முடிவுக்கு வந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து மண்ணில் கடைசியாக இந்தியா விளையாடிய டெஸ்ட் தொடரில், 3-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 



Trending Articles

Sponsored