சோடிவில்லி தடகளப் போட்டிகள் - தங்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ராSponsoredபிரான்ஸில் நடக்கும் சோடிவில்லி தடகளப் போட்டியில்,  ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். 

பிரான்ஸில் நடந்துவரும் சோடிவில்லி தடகளப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில், 85.17 மீட்டர் தூரம் வீசி சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த ஆண்ட்ரியன் மார்டரே என்ற வீரர், 81.48 மீட்டர் வீசி இரண்டாம் இடமும், எடிஸ் மாட்யூஸ்விச் 79.31 மீட்டர் வீசி மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ட்ரினிடாடியன் வீரர் ககேஷார்ன் வால்காட் ஐந்தாவது இடம் பிடித்து, தன் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளார். 

Sponsored


Sponsored


இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். அவர், காமன்வெல்த்தில் வீசிய தொலைவைவிட தற்போது குறைவான தூரமே வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அடுத்த மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் தங்கம் வெல்வார் எனப் பலரும் எதிர்பார்த்துவருகின்றனர்.Trending Articles

Sponsored