`மிடில் ஆர்டரில் ஏன் இத்தனை குழப்பம்?' - இந்திய அணிக்கு கேள்வி எழுப்பும் கங்குலி



Sponsored



'அடிக்கடி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மாற்றுவது நல்லதல்ல' என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தது, இந்தியாவுக்கு சற்று சறுக்கலை ஏற்படுத்தியது. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பின், தொடர் வெற்றிகளைக் குவித்த இந்தியா, முதல்முறையாக அவரது தலைமையின் கீழ் இரு நாடுகளுக்கிடையிலான ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இதற்குப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்து நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கு  இந்திய வீரர்கள்  தயாராகிவருகின்றனர். இந்நிலையில், இந்திய அணி தோல்விக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ``இந்திய அணியின் பேட்டிங் வரிசை மற்ற அணிகளை அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. ஷிகர் தவான், ரோஹித், கோலி என ஓப்பனிங் பேட்டிங்கில் இந்திய அணியை அசைக்க முடியாது. ஆனால், மிடில் ஆர்டரில் தான் ஏன் இத்தனை குழப்பம் என்று தெரியவில்லை. மிடில் ஆர்டரை அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல. அவ்வாறு மாற்றுவதால், ரோஹித் உள்ளிட்ட ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்குதான் அதிக நெருக்கடி ஏற்படும். இது, இந்தியப் பிரச்னையை ஏற்படுத்தும். கே.எல் ராகுல், ரஹானே என இரு திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏன் மிடில் ஆர்டரில் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இவர்களது திறமையை அணி நிர்வாகம் சரியாகப் பயன்படுத்தவில்லை.  

Sponsored


Sponsored


நான் மட்டும் தற்போது அணியில் இருந்திருந்தால், கண்ணை மூடிக்கொண்டு ராகுலை 4-வது இடத்தில் களமிறக்கியிருப்பேன். ரஹானேவை ஒருநாள் தொடருக்கு எடுக்காவிட்டாலும், அவரை மீண்டும் டெஸ்ட் தொடருக்கு அழைத்திருப்பதைப் பார்க்கும்போது, ரஹானேவின் தேவையை அணி நிர்வாகம் உணர்ந்துள்ளது எனத் தெரிகிறது. தோனியைப் பொறுத்தவரை, அவர் நிலைத்தன்மை இல்லாமல் தடுமாறுகிறார். அவர் இன்னும் கடின உழைப்பை வெளிக்காட்டி, ஓராண்டுக்கு மேல் அணியில் நீட்டிக்க வேண்டும்" என்றார். 



Trending Articles

Sponsored