லஞ்சப் புகார் சர்ச்சை - ராஜீவ் சுக்லா உதவியாளர் ராஜினாமா!Sponsoredகிரிக்கெட் வீரர்களிடம் லஞ்சம் கேட்ட புகாரில், ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவின் உதவியாளர் தனது பணியை ராஜினாமாசெய்துள்ளார். 

ஐபிஎல் சேர்மன் ரஜீவ் சுக்லா, உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருக்கிறார். இவரது உதவியாளராக இருப்பவர், முகமது அக்ரம் சைஃபி. இவருக்கு, பிசிசிஐ-யில் இருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. இவர், ராஜீவ் சுக்லாவுக்கு மிகவும் நெருக்கம் என்று பேசப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில கிரிக்கெட் வீரர் ராகுல் சர்மா, இவர்மீது சமீபத்தில் புகார் ஒன்றைத் தெரிவித்தார். அதில், ``இளம் வீரர்களிடம் சைஃபி ரூ.5 லட்சம், 10 லட்சம் லஞ்சம் கேட்கிறார். அவ்வாறு கொடுத்தால்தான் உத்தரப்பிரதேச அணியில் இடம் கிடைக்கும் என்று சொல்கிறார். மேலும், அவர் சொல்லும் ஹோட்டலுக்கு பெண்களை அனுப்பிவைக்க வேண்டும் எனவும் சைஃபி மிரட்டுகிறார். இது, இளம் வீரர்களுக்குக் கடினமாக உள்ளது. 

Sponsored


வீரர்கள் சிலர், அவர் கேட்பதைச் செய்துள்ளனர். இதனால், மற்ற வீரர்களிடம் இதேபோன்று வலியுறுத்தி வருகிறார்" எனப் புகார் அளித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் சர்மா மற்றும் சைஃபி இடையேயான உரையாடலை தொலைக்காட்சி ஒன்றும் ஒலிபரப்பியது. இது, கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்த, அக்ரம் சைஃபியை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்தது. மேலும், ஒருநபர் கமிஷன் நியமிக்கவும் பிசிசிஐ முடிவுசெய்துள்ளது. கமிஷன் தேர்வுசெய்யப்பட்டதுடன், விசாரணை நடைபெறும் என்றும் 15 நாள்களில் உண்மை நிலவரம் தெரிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்தது. 

Sponsored


இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள இவ்விகாரம், வீரர்களிடையே கருத்து மோதலையும், இளம் வீரர்களிடம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, தன்மீதான புகாரை மறுத்துள்ள முகமது அக்ரம் சைஃபி, தனது பணியை ராஜினாமாசெய்துள்ளார். Trending Articles

Sponsored