51-வது நிமிடத்தில் 6... 34 ஹெட்டர்... அவுட் சைட் தி பாக்ஸ் 26... வேர்ல்ட் கப் கோல்ஸ் இன் நம்பர்ஸ்! #VikatanInfoghraphics



கோல்கள் - எப்போதுமே இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம். கோல் போஸ்ட்டுக்குள் பந்து விழுவதால் மட்டுமே அவை பேசப்படுவதில்லை. அது அடிக்கப்பட்ட தருணம், அடிக்கப்பட்ட நேரம், அடிக்கப்பட்ட விதம் என ஒவ்வொன்றுமே பேசுபொருள். இந்த உலகக் கோப்பையில் 169 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அவை அடிக்கப்பட்ட நேரம், அடிக்கப்பட்ட விதம்...அதைப் பற்றிய ஓர் அலசல்.

Sponsored


இந்த உலகக் கோப்பையில்தான் பெனால்டி கோல்களும் செட் பீஸ் கோல்களும் அதிகமாக அடிக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட 29 பெனால்டிகளில் 22 கோலாக்கப்பட்டன. அதேபோல் செட்பீஸ்களிலிருந்து 28 கோல்கள் அடிக்கப்பட்டன. 'டிஃப்ளக்டட் கோல்களும் இனி ஓன் கோல்' என்ற முட்டாள்தனமான முடிவை ஃபிஃபா எடுத்ததால் 12 ஓன் கோல்களும்  கணக்கில் சேர்ந்தன.

Sponsored


 

குரோஷியா அணிக்கெதிரான ரவுண்ட் ஆஃப் 16 பிரிவில், டென்மார்க் வீரர் ஜோர்ஜென்சன் 57-வது நொடியில் அடித்ததுதான் இந்த உலகக் கோப்பையின் அதிவேக கோல். 64 போட்டிகளில், முதல் நிமிடமே அடிக்கப்பட்ட ஒரே கோல் அதுதான். இந்தத் தொடரில், முதல் பாதியை (65) விட இரண்டாம் பாதியில் (101) அதிகமான கோல்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக  51-வது நிமிடத்தில் மட்டுமே 6 கோல்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டாப்பேஜ் டைம் பரிதாபம் இன்னும் கொடுமை. இரண்டாவது பாதி ஸ்டாப்பேஜ் டைமில் மட்டும் 19 கோல்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. செகண்ட் ஆஃப் ஸ்டாப்பேஜ் டைமின் 3-வது நிமிடத்தில் மட்டும் 7 கோல்கள். இந்த உலகக் கோப்பையில் ஒரே நிமிடத்தில் அதிக கோல்கள் அடிக்கப்பட்டதும் இந்த நிமிடத்தில்தான்.

Sponsored


லுகாகு, ஹசார்ட், மெர்டன்ஸ், டி ப்ருய்ன் என வெறித்தனமான அட்டாக் கொண்டிருந்த பெல்ஜியம் அணிதான் இந்த வேர்ல்ட் கப்பின் டாப் ஸ்கோரர்கள். குரூப் பிரிவில் மட்டுமே 9 கோல்கள் அடித்திருந்த பெல்ஜியம், ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் 16 கோல்கள் அடித்தது. அந்த அணிக்கு அடுத்த படியாக குரோஷியா, ஃபிரான்ஸ் அணிகள் தலா 14 கோல்கள் அடித்து இரண்டாமிடத்தில் இருக்கின்றன. அவர்கள் தவிர்த்து இங்கிலாந்து (12), ரஷ்யா (11) அணிகள் மட்டுமே 10 கோல்களுக்கு அதிகமாக அடித்தன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி இந்த உலகக் கோப்பையில் வெறும் 2 கோல்கள் மட்டுமே அடித்தது. உலகக் கோப்பையில் பங்கேற்ற 32 அணிகளும் குறைந்தபட்சம் 2 கோல்களாவது அடித்தன. 

169 கோல்களில் பாக்சுக்குள்ளிருந்து அடிக்கப்பட்ட கோல்களில் எண்ணிக்கை 143. 26 கோல்கள் பாக்சுக்கு வெளியே இருந்து அடிக்கப்பட்டன. அதேபோல், வலது காலில் 83 கோல்களும், இடது காலில் 48 கோல்களும் அடிக்கப்பட்டன. 34 கோல்கள் ஹெட்டரால் அடிக்கப்பட்டவை. ஸ்வீடன் அணிக்கு எதிராக மெக்சிகோ வீரர் எட்சன் ஆல்வரஸ் அடித்த ஓன் கோலும், பெல்ஜியம் அணிக்கெதிராக ஃபெர்னாண்டினோ அடித்த ஓன் கோலும் கையில் பட்டு கோலானவை. அந்த வகையில் இந்தத் தொடரில் 2 கோல்கள் கையால் அடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் 2 கோல்கள் உடம்பில் பட்டு விழுந்துள்ளது. அந்த இரண்டு கோல்களுமே ஓன் கோல்கள்தான். பனாமா அணிக்கெதிராக துனிசிய வீரர் மெரியா, கோஸ்டா ரிகாவுக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து கோல்கீப்பர் சாம்மர் இருவரும் இந்த வகையில் ஓன் கோல் அடித்தனர். 



Trending Articles

Sponsored