`இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதிப்பார்' - ரிஷப் பன்ட் குறித்து நெகிழும் ராகுல் டிராவிட்!



Sponsored



இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பன்ட் சாதிப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணி வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதேபோல் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதனால் டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அது இந்திய அணி தேர்வுதான். மொத்தம் 18 வீரர்கள் அடங்கிய குழுவில் ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாகூர், கருண் நாயர், குல்தீப், பும்ரா என இளைஞர் பட்டாளத்தை பி.சி.சி.ஐ களமிறக்கியுள்ளது. இவர்கள் முதல் 3 போட்டிக்கான வீரர்கள் மட்டுமே. கருண் நாயர், ரிஷப் பன்ட்  என இளம் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டதற்கு தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா ஏ - இங்கிலாந்து ஏ - வெஸ்ட் இண்டீஸ் ஏ தொடரில் இவர்கள் சிறப்பாக செயல்படுவதுதான். 

Sponsored


இதற்கிடையே, ரிஷப் பன்ட்  முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து இந்திய ஏ அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான டிராவிட் கருத்து கூறியுள்ளார். அதில், ``ரிஷப் திறமையான வீரர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கடந்த 3 மூன்று, நான்கு தொடர்களாக அவர் தனது வித்தியாசமான பேட்டிங் திறமையை நிரூபித்துள்ளார். அவர் எவ்வாறு பேட்டிங் செய்வார் என அனைவருக்கும் தெரியும். ரிஷப்பை இந்திய டெஸ்ட் அணியில் சேர்த்தது மகிழ்ச்சி. அவர் எப்போதும் சூழ்நிலையைக் கணித்து விளையாடக் கூடியவர். இங்கிலாந்தில் நடைபெற்ற அங்கீகாரமில்லாத டெஸ்ட் தொடரில் அவர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஜெயந்த் யாதவ்வுடன் கூட்டணி அமைத்து அவர் வெளிப்படுத்திய ஆட்டம் அணிக்கு கைகொடுத்தது. கடந்த ரஞ்சி தொடரில் 900 ரன்களுக்கும் அதிகமாக எடுத்தார். அதேபோல் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடினார். எப்போதும் அட்டாக்கிங் ஆக விளையாடக் கூடிய ரிஷப் ஆட்டத்திறன் நன்கு அறிவேன். அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" எனக் கூறியுள்ளார். 

Sponsored




Trending Articles

Sponsored