`தொடர் ஒழுங்கீனம்'- இலங்கை வீரருக்கு அதிர்ச்சி அளித்த கிரிக்கெட் வாரியம்Sponsoredசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை வீரர் குணதிலகா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது, நைட் கிளப் சென்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரிக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தனுஷுகா குணதிலகாவை சர்வேதேசப் போட்டிகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த வருடம் இந்தியாவுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக குணதிலகாவுக்கு 6 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வருடம் இலங்கையில் நடந்த நிதாஹஸ் கோப்பை முத்தரப்பு டி20 தொடரின்போது வங்கதேச அணியுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக அவர் மீது புகார் கூறப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரிலும் அவரின் செயல்பாடு விமர்சனத்துக்குள்ளானது. தொடர்ச்சியான புகார்களால் சர்ச்சைகள் எழவே, குணதிலகா மீது ஒழுங்கீன நடவடிக்கையை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு எடுத்துள்ளது. 

Sponsored


இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், ``முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு குணதிலகா சர்வதேசப் போட்டிகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது ஆண்டு ஊதியத்திலிருந்து 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை ஆண்டுகள் சஸ்பெண்ட் என்றும், எந்த மாதிரியான ஒழுங்கீன நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார் என்பது குறித்த தகவல்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கவில்லை. 

Sponsored
Trending Articles

Sponsored