சாஹலின் கமெண்டுக்கு ரோஹித் மனைவி கொடுத்த பதில்!Sponsoredரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்துக்கு சாஹல் அடித்த கமென்ட்டுக்கு, ரோஹித்தின் மனைவி கொடுத்த பதில் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில், டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளன. டி-20 கிரிக்கெட்டின் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோஹித் ஷர்மாவுக்கு, டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அசத்தும் ரோஹித், டெஸ்ட் போட்டிகளில் ஜொலிப்பதில்லை. இதன் காரணமாக, ரோஹித்துக்கு  இந்த டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கவில்லை. மனைவியுடன் இங்கிலாந்து சென்றிருக்கும் ரோஹித், பழைமையான இங்கிலாந்து நகரங்களைச் சுற்றிப்பார்த்துவருகிறார். இந்தப் பசுமையான நினைவுகளைப் புகைப்படங்களாக க்ளிக் செய்துள்ளவர், அவற்றைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, நண்பர்களுக்குத் தெரியப்படுத்திவருகிறார். அதில் ஒரு புகைப்படத்தில், ரோஹித் மட்டும் தனியாக போஸ் கொடுக்கிறார். அதில், இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல்,  ‘மிஸ் யூ’ எனப் பதிவிட்டுள்ளார். சாஹல் என்ன அர்த்தத்தில் பதிவிட்டாரோ தெரியவில்லை. அதற்குள், ரோஹித் மனைவி ரித்திகா வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிட்டார். அந்தப் பதிவில், அவர் தற்போது என்னுடையவர் (he is mine now) எனப் பதிவிட்டுள்ளார். 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored