`ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபர்' - தோனிக்கு கிடைத்த அங்கீகாரம்!



ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபராக தோனி உள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sponsored


முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டாலும், மற்ற போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவரது ஃபார்ம் குறித்து அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்தாலும், விமர்சனத்துக்கு அப்பால் இளம்வீரர்களுக்கு சவால் விடுக்கும் விதமாக அவர் திறமையாகவே செயல்பட்டு வருகிறார். அவரது அனுபவம் இந்திய அணிக்கு தொடர்ந்து கைகொடுத்து வருகிறது. இந்நிலையில், பீகார் - ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபராக தோனி உள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நிஷா சிங்கமார் என்ற வருமான வரித்துறை அதிகாரி கூறுகையில், ``2017 - 18 நிதி ஆண்டில் பீகார் - ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபராக தோனி உள்ளார். ரூ.12.17 கோடி வரியாக செலுத்தியுள்ளார். இது கடந்த 2016 - 17-ம் நிதி ஆண்டில் 10.93 கோடி என்ற அளவே இருந்தது. முன்னதாக 2013-ம் நிதி ஆண்டிலும் தோனி அதிக அளவு வருமான வரி செலுத்தினார்" என்று கூறினார். 

Sponsored


இதற்கிடையே, இந்திய அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் தோனியும், கோலியுமே முதலிடத்தில் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார் தோனி. அப்போது அவரது சொத்து மதிப்பு 111 மில்லியன் டாலர் என்றும், இந்த வருடம் மட்டும் 31.5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டினார் எனவும் ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதேபோல் ஐ.எஸ்.எல் கால்பந்துப் போட்டியில் சென்னையின் எப்ஃசி அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் உள்ளார். அதேபோல் `ஹாக்கி இந்தியா' தொடரில் விளையாடும் ராஞ்சி ராய்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sponsored




Trending Articles

Sponsored