பந்துவீச்சில் கலக்கிய ஜோ ரூட்.. டெஸ்ட் தொடருக்கு புது வியூகம் வகுக்கும் இங்கிலாந்து!இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அணி பதிலடி தந்தது. 

Sponsored


Photo: Twitter/County Championship

Sponsored


இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்கள் அந்நாட்டில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய அணியும் 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இந்தப் பயிற்சி போட்டி இன்று தொடங்குகிறது. 

Sponsored


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில்  ஜோ ரூட்டின் ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக இருந்தது.  இந்தியாவுக்கு எதிரான டி-20 போடியிலும் அவரின் பங்களிப்பு சிறப்பானதாக இல்லை. இதனால் ஒரு போட்டியில் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து நடைபெற்ற  ஒருநாள் தொடரில் மீண்டும் ஃபார்முக்கு வந்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இந்நிலையில், கடந்த 22 -ம் தேதி துவங்கிய கவுண்டி போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார் ரூட். யார்க்‌ஷையர் மற்றும் லான்கஷையர் அணிகள் மோதிய போட்டியில் யார்க்‌ஷையர் அணிக்காகக் களம் இறங்கினார் ரூட். முதல் இன்னிங்ஸில் 22 ரன்னில் ஆட்டமிழந்த ரூட் இரண்டாம் இன்னிங்ஸில் 3 ரன்னில் நடையைக் கட்டினார். பேட்டிங்கில் பெரிதாக சாதிக்காதபோதும் பந்துவீச்சில் அசத்திவிட்டார் ரூட். இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய ரூட் 7.4 ஓவர்கள்  வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் 5 மெய்டன் ஓவர்களும் அடங்கும். இதன் மூலம் யார்க்‌ஷையர் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஜோ ரூட் பந்து வீச்சில் அசத்தியுள்ளது, இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து புதிய வியூகங்களை வகுக்க உதவும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள். ஜோ ரூட்டை சுழற்பந்து வீச்சாளராகப் பயன்படுத்தினால், அதன் மூலம் கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் களம் காணலாம். ஆனால், இது ஆடுகளத்தின் தன்மை குறித்து தெரிந்த பின்னர்தான் முடிவு செய்ய முடியும். வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் என்றால் ரூட்டை சுழற்பந்து வீச்சாளராகப் பயன்படுத்தி,  கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்கும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு கிடைக்கும். அதே நேரம் இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை நன்றாக சமாளித்து ஆடுவார்கள் என்பதையும் இங்கிலாந்து கவனத்தில் கொள்ளும். Trending Articles

Sponsored