இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்துக்கு 82 லட்சம் வருமானம் பெறும் விராட் கோலி!Sponsoredஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதன்மூலம் அதிகமாக வருமானம் ஈட்டுவோர் பட்டியலில், இந்திய கேப்டன் விராட் கோலி இடம்பிடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாகவே இருக்கிறார். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனச் சமூக வலைதளங்களில் அவர் அடிக்கடி பதிவுகளை வெளியிடுவது வழக்கம். இவற்றுக்கு, ரசிகர்களின் லைக்ஸ் குவியும். இதற்கிடையே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்வதன்மூலம் அதிகமாகச் சம்பாதிப்போர் பட்டியலில் இந்திய கேப்டன் கோலி இடம்பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களின் விளம்பரங்களைப் பகிரும் பிரபலங்களுக்கு, அந்தந்த நிறுவனங்கள் ஊதியம் அளிக்கும். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்தான், கோலி 17 வது இடம் பிடித்துள்ளார். அவர், இன்ஸ்டாகிராமில் விளம்பரங்கள் பகிர்வதன்மூலம் ரூ.82 லட்சம் வருமானம் பெறுகிறார். இந்தியா சார்பில் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பிரபலம், கோலி மட்டுமே. அவரை 23.2 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கின்றனர். மேலும், இன்ஸ்டாகிராம் 2017-ம் ஆண்டின் `Most Engaged Account' என்ற விருதை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Sponsored


இதில், அமெரிக்க மாடல் அழகியும் தொகுப்பாளினியுமான கெயிலே ஜென்னர் முதலிடம் பிடித்துள்ளார். அவர், இன்ஸ்டாகிராம் விளம்பரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.6.87  கோடி பெறுகிறார். இதேபோல, மற்றொரு அமெரிக்க நடிகை செலீனா தாமஸ், இதில் இரண்டாமிடமும் பிரபல போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ ரூ.5 கோடி பெற்று இப்பட்டியலில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored