பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய தவான்.. ராகுல், தினேஷ் கார்த்திக் அபாரம்!Sponsoredஇங்கிலாந்தில் எஸ்ஸக்ஸ் அணியுடனாக பயிற்சி ஆட்டத்தில் இந்தியா முதல் நாள் ஆட்டநேரமுடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது. 

Photo Credit: Twitter/BCCI

Sponsored


இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது. அதன் பின்னர் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இங்கிலாந்து இந்திய அணிக்குப் பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி எஸ்ஸக்ஸ் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆனால், இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் ஓவரிலே தொடக்க ஆட்டக்காரரான தவான் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்துக் களமிறங்கிய புஜாரா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 5 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. பின்னர் களமிறங்கிய ரஹானே மற்றொரு தொடக்க ஆட்டகாரரான முரளி விஜய் உடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

Sponsored


Photo Credit: Twitter/BCCI

பொறுமையாக ஆடிய ரஹானே 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி கவனமாக ஆடினார். மறுபுறம் அரைசதம் அடித்த விஜய் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுக்கு மாற்றாக லோகேஷ் ராகுல் களமிறக்கப்பட்டார். ராகுலும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி 68 ரன்னில் ஆட்டமிழக்க, அதன் பின்னர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ராகுல் 58 ரன்களில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 82 ரன்னிலும் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். Trending Articles

Sponsored