உலகக் கோப்பைத் தொடரில் சிறந்த கோல் அறிவிப்பு!லகக் கோப்பைத் தொடரில் பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் பெஞ்சமின் பாவெட் அடித்த கோல் சிறந்த கோலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Sponsored


அர்ஜென்டினாவுக்கு எதிரான நாக்- அவுட் ஆட்டத்தில் 57-வது நிமிடத்தில் பிரான்ஸின் இடதுபுற விங்கர் லூகாஸ் ஹெர்னான்டஸ் பந்தை கிராஸ் செய்தார். வலது புறத்தில் பெனால்டி ஏரியாவுக்கு வெளியே இருந்து பாவெட் அடித்த 'வாலி' அர்ஜென்டினா கோல் கம்பத்தின் டாப் கார்னருக்குள் நுழைந்தது. இதனால், ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் அடைந்தது. முடிவில் பிரான்ஸ் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. 

Sponsored


இந்த உலகக் கோப்பைத் தொடரில் 64 ஆட்டங்களில் மொத்தம் 169 கோல்கள் அடிக்கப்பட்டன. அதில், சிறந்த கோலாக பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர் 22 வயது பெஞ்சமின் பாவெட்டின் 'வாலி 'அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஜப்பான் அணிக்கு எதிராக கொலம்பிய வீரர் ஜூவான் குயின்ட்ரோ அடித்த கோலும் மூன்றாவதாக முதல் சுற்று ஆட்டத்தில்  அர்ஜென்டினா அணிக்கு எதிராக லூகா மாட்ரிச் அடித்த கோலும் தேர்வு செய்யப்பட்டது. 

Sponsored


ஃபிஃபா. காமில் ரசிகர்களே ஆன்லைன் வாக்கெடுப்பு வழியாக சிறந்த கோல்களைத் தேர்வு செய்தனர். 1930-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை வரலாற்றில் இந்த விருதைப் பெறும் முதல் ஐரோப்பிய வீரர் பெஞ்சமின் பாவெட்தான். Trending Articles

Sponsored