சிறப்பாகப் பந்துவீசிய உமேஷ் யாதவ்... 2-ம் நாள் ஆட்ட நேரமுடிவில் இந்தியா முன்னிலை!



Sponsored



இங்கிலாந்தில் எஸ்ஸக்ஸ் அணியுடனாக பயிற்சி ஆட்டத்தில்  இரண்டாம் நாள் ஆட்டநேரமுடிவில் இந்தியா 158 ரன்கள் முன்னிலையில் உள்ளது. உமேஷ் யாதவ் சிறப்பாக பந்து வீசினார். 

Photo credit: Twitter/BCCI

Sponsored


இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி  எஸ்ஸக்ஸ் அணியுடன் 3 நாள் பயிற்சிப் போட்டியில் மோதுகிறது. முதல்நாள் ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 82 ரன்னிலும் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலே தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க அடுத்து வந்த கருண் நாயரும் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜடேஜா, 15 ரன்களும் ரிஷப் பாண்ட் 34 ரன்களும் எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 395 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

Sponsored


இதன் பின்னர் எஸ்ஸக்ஸ் அணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி ஆகியோர் பந்துவீச்சைத் தொடங்கினர். தொடக்கம் முதலே உமேஷ் யாதவ் சிறப்பாகப் பந்து வீசி இரண்டு விக்கெட்டுகள் சாய்த்தார். 14 ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவ் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இஷாந்த் ஷர்மாவும் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் எஸ்ஸக்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.



Trending Articles

Sponsored