`உலகத்துக்கே தெரியும் அவர் ரன்மெஷின் என்று!’ - விராட் கோலிக்கு ஆதரவாகப் பொங்கிய நெட்டிசன்கள்



இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து ட்விட்டரில் தெரிவித்த கருத்துக்காக நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் அணியான எஸெக்ஸ்.

Sponsored


Photo Credit: BCCI

Sponsored


இந்திய அணி, டி-20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு சென்றுள்ளது. டி-20, ஒருநாள் போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. அந்தப் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கவுன்டி அணியான எஸெக்ஸ் அணியுடன் மூன்று நாள் பயிற்சிப் போட்டியில் இந்திய அணி விளையாடியது. நான்கு நாள்கள் நடைபெறுவதாக இருந்த அந்த போட்டி, வெப்பம் அலை காரணமாக 3 நாள்களாகக் குறைக்கப்பட்டது. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர்கள், குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும், விராட் கோலி 93 பந்துகளில் 68 ரன்களைக் குவித்தார்.

Sponsored


கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தது குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த எஸ்ஸெக்ஸ் அணி நிர்வாகம், 'பராவாயில்லை, இந்த நபர் ஓரளவு நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறார்' என்று கருத்துத் தெரிவித்திருந்தது. எஸெக்ஸ் அணியின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனங்களையும், விமர்சனங்களையும் பதிவு செய்துவருகின்றனர். கிரிக்கெட்டில் விராட் கோலி ரன் மெஷின் என்பது உலகுக்கே தெரியும். உங்களுக்கு இப்போதுதான் தெரிகிறதா? என்று நெட்டிசன் ஒருவர் ஆவேசமாகப் பதிலளித்திருக்கிறார்.



Trending Articles

Sponsored