`சிறிதுகூட ஐ.பி.எல் நட்புக்கு இடமில்லை!' -  டெஸ்ட் தொடர் குறித்து ஜோஸ் பட்லர்Sponsoredடெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதே முக்கியம். இதில் சிறிதுகூட ஐ.பி.எல் நட்புக்கு இடமில்லை என இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல் தொடரின் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களுக்கு மேல் அடித்து அசத்தியவர் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர். இவர் தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளார். இதற்காக தீவிரப் பயிற்சியில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில், டெஸ்ட் தொடர் குறித்தும், ஐ.பி.எல் போட்டியின் ஏற்பட்ட நட்பு குறித்தும் ஜோஸ் பட்லர் கூறுகையில், ``ஐ.பி.எல் போட்டிகளின்போது இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்டியுள்ளேன். களத்தில் மட்டுமல்ல சாப்பிடும் நேரம், பயிற்சி நேரம் என அனைத்து நேரத்திலும் ஒன்றாகவே சுத்தியிருக்கிறோம். 

Sponsored


என்னைப் போலவே, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் என சில இங்கிலாந்து வீரர்களும் இந்திய வீரர்களுடன் நல்ல நட்பில் உள்ளனர். ஆனால், நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் சிறிதுகூட ஐ.பி.எல் நட்புக்கு இடமில்லை. நாங்கள் வெற்றிபெறுவதே எங்களுக்கு முக்கியம். இந்திய வீரர்கள் களத்தில் இறங்கிவிட்டால் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்களது மனநிலை வேறாக இருக்கும். அவர்களுக்கு வெற்றி ஒன்றே குறிக்கோள். இதே மனநிலைதான் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கும் இருக்கிறது. இதனை நான் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். என் முதல் டெஸ்ட் சதத்தை இந்திய அணிக்கு எதிராக எடுப்பதில் ஆவலோடு இருக்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

Sponsored
Trending Articles

Sponsored