`ப்ளீஸ் இதை வீட்டில் ட்ரை பண்ணுங்க' - சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட தோனி!Sponsoredஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடாமல் உள்ளார். இதனால் தனது விடுமுறை நாள்களை வெளி இடங்களுக்கு செல்வது, பைக் ரைடிங் என ஜாலியாக பொழுதைப்போக்கிவருகிறார். அவ்வாறு ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகிவருகிறது. `ப்ளீஸ், இதைக் கொஞ்சம் வீட்டில் ட்ரை பண்ணுங்க' என்ற வேண்டுகோளுடன் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, மழையில் நனைந்தவாறு ஒரு சிறிய சைக்கிளில் உட்கார்ந்து, ஸ்டைலாக கண்ணாடி அணிந்துகொண்டு ஒரு குச்சியை எடுத்து வாயில் கவ்விக்கொள்கிறார். ஹெட்போன் சகிதமாக சைக்கிளைச் சுற்றி சதுர வடிவிலான கம்பியை மாட்டிக்கொண்டு, சைக்கிளை உந்தித் தள்ளுகிறார். மேட்டில் இருந்து கீழே இறங்குகிறார். இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வித்தியாசமாக இருக்கும் இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்துவருவதால், லைக்ஸை குவித்துவருகிறது. அதே நேரத்தில், பலரும் இந்த சைக்கிள் சாகசம் குழப்பமாக உள்ளதாக கமெண்ட்ஸ் தெரிவித்துவருகின்றனர். 

Sponsored


 

Just for fun, plz try it at home.

Sponsored


A post shared by M S Dhoni (@mahi7781) onTrending Articles

Sponsored