புஜாரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி! - 1,000-வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்டிங்Sponsoredஇந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

Photo Credit: BCCI

Sponsored


இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் முடிந்த நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங் தேர்வு செய்தார். 

Sponsored


எஸெக்ஸ் அணியுடனான பயிற்சிப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்த தவான், இன்றைய போட்டியின் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவது சந்தேகமே என விமர்சகர்கள் கணித்திருந்த நிலையில், கோலி எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது (Kohli had other plans). பிளேயிங் லெவனில் தவான், விஜய், கே.எல்.ராகுல் ஆகியோரை டிக் அடித்திருக்கிறார் கோலி. புஜாரா இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஒன் டவுனில் கே.எல்.ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல், அஷ்வின் - ஜடேஜா அல்லது அஷ்வின் - குல்தீப் யாதவ் என எந்தக் காம்போ களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனில் அஷ்வினுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டிருக்கிறது. முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் ஷர்மா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதேபோல், ரஹானே, தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். இங்கிலாந்து அணி, தனது 1,000-மாவது டெஸ்டில் களமிறங்கிறது. Trending Articles

Sponsored