பெல்ப்ஸின் சிறுவயது சாதனையை முறியடித்த 10 வயது சிறுவன்!Sponsoredஒலிம்பிக் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸின் சாதனையை முறியடித்துள்ளான் கிளார்க் கென்ட் அப்வாடா என்ற 10 வயது சிறுவன். 

Photo Credit - facebook /Salinas Aquatic Center MCAT

Sponsored


ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 28 தங்கம் பெற்று ஜாம்பவனாக வலம் வந்தவர் மைக்கேல் ஃப்ரெட் பெல்ப்ஸ். சர்வதேச நீச்சல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பெல்ப்ஸ், கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்ற நீச்சல் போட்டி ஒன்றில் 100 மீட்டர் பயண தூரத்தை 1:10.48 விநாடிகளில் நீந்திக் கடந்து சாதனை படைத்தார். இவருக்குப் பிறகு இந்த சாதனையை யாரும் எட்டவில்லை.

Sponsored


இந்த நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் 2018 - Long Course Meters Far Western International Age Group Championships என்ற நீச்சல் போட்டி கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த கிளார்க் கென்ட் அப்வாடா (Clark Kent Apuada) என்ற 10 வயது சிறுவன் போட்டியில் கலந்துகொண்டு, மைக்கேல் ஃப்ரெட் பெல்ப்ஸ் சாதனையை முறியடித்துள்ளான். 

Photo Credit - facebook /Salinas Aquatic Center MCAT

நீச்சலின் ஒருவகையான பட்டர்பிளை என்ற நீச்சல் பிரிவில், 100 மீட்டர் பயண தூரத்தை வெறும் 1:09.38 விநாடிகளில் கடந்து இலக்கை கிளார்க் எட்டினார். அதையடுத்து, 23 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்கேல் ஃப்ரெட் பெல்ப்ஸ் சிறுவயது சாதனையை முறியடித்தவர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார். இந்தத் தகவலை சலினஸ் அக்வாடிக் சென்டர் MCAT தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தன் மூன்று வயதில் நீச்சல் கற்றுக்கொண்ட கிளார்க், 7 வயது முதல் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். நீச்சல் தவிர, இசை, தற்காப்புக் கலை உள்ளிட்ட துறைகளிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.Trending Articles

Sponsored